Ad Code

Ticker

6/recent/ticker-posts

பயிருக்கு தேவைப்படும் சத்துக்கள் மற்றும் சத்துக்களை கொடுக்கக்கூடிய தாவரங்கள்

Plants that can provide the nutrients and nutrients the crop needs





பயிர்களின் வளர்ச்சிக்கு  16 வகையான ஊட்டசத்துக்கள் தேவைப்படும் .பயிர் வளர்ச்சிக்கு அதிகமாக தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்கள் எனப்படும். பயிர் வளர்ச்சிக்கு குறைவாக தேவைப்படும் சத்துக்கள் 
நுண்ணூட்டச்சத்துக்கள்  எனப்படும்.

A. பேரூட்டச்சத்துக்கள்


தழைச்சத்து (N)
மணிச்சத்து ((P)
சாம்பல்சத்து (K)


B. இரண்டாம் நிலை பேரூட்ட சத்து


சுண்ணாம்புச்சத்து (Ca)
கந்தகசத்து (Sulphur)
மெக்னீசியம் சத்து(Mg) முதலியன அதிகளவில் தேவைப்படும் எனவே இவை *இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்கள்* எனப்படும். 


C. நுண்ணூட்டச்சத்து


இரும்புச்சத்து (Fe)
துத்தநாக சத்து (Zn)
மாங்கனீசு சத்து (Mn)
மாலிப்டின சத்து (Mo)
தாமிர சத்து (Cu)
போரான் சத்து (B) பயிர்களுக்கு குறைந்த அளவே  தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துக்கள்எனப்படும்.

D. பயிர் விளைவிக்கும் சத்துக்கள்

குளோரின் சத்து
சோடியம் சத்து
அலுமினியம் சத்து சிலிகான்சத்து
- வளர்ச்சிக்கு மிக மிகச் குறைந்த அளவே தேவைப்படும் இவை  பயிர் விளைவிக்கும் சத்துக்கள் எனப்படும் 

தாவரத்தில் உள்ள சத்துக்கள் & பயன்கள்




ஆவாரம் இலை
சத்து :  மணிச்சத்து
பயன்  : மணி பிடிக்க உதவும்

முருங்கை இலை,  கருவேப்பிலை :  இரும்புச்சத்து உள்ளது 
பயன் :   பூக்கள் நிறைய பிடிக்கும்  



எருக்கம் இலை
சத்து  :  போரான் சத்து உள்ளது- 
பயன்கள் :  
காய், பூ, அதிகம் பிடிக்கும் 
காய்,   கோணலாகாமல் நேராக, சீராக இருக்கும்.
பிஞ்சுகள், குரும்பைகள் உதிர்வது நிற்கும்.



புளிய இலை
சத்து  :   துத்தநாக சத்து 
பயன் :   செடியில் உள்ள இலைகள் சிறியதாக இல்லாமல் ஒரே சீராக  இருக்கும்.  
பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும்



செம்பருத்தி, அவரை இலை
சத்து :  தாமிர சத்து, 
பயன் : தண்டுப்பகுதி மெலிந்து காணப்படாது

கொளுஞ்சி, தக்கபூண்டு
 சத்து  : தழைச்சத்து
 பயன் :  பயிர் செழித்து காணப்படும்

துத்தி இலை
சத்து :  சுண்ணாம்புச் சத்து( கால்சியம் கார்பனேட்) 
பயன் :   சத்துக்களை  பயிரின் பாகங்களுக்கு பிரித்துக் கொடுக்கும்.
 
எள்ளுசெடி 
சத்து :  கந்தகம்( சல்பர்) 
பயன் :    செடி வளர்ச்சி அதிகரிக்கும்-
தண்டு மெலிந்து இருக்காது மஞ்சள் கலராக மாறாது

வெண்டை இலை


சத்து :   அயோடின்(சோடியம்) 
பயன் :     மகரந்தம்  அதிகரிக்கும்

மூங்கில் இலை 
சத்து :      சிலிக்கா
பயன் :    பயிர் நேராக இருக்கும்

பசலைக்கீலை
சத்து :       மெக்னீசியம் 
பயன் :     இலை ஓரம் சிவப்பாக மாறாது


அனைத்து பூக்களிலும்
 சத்து :      மாலிப்டினம் 
பயன் :      பூக்கள் உதிராது 

நொச்சி :  பூச்சிகளை விரட்டும்

வேம்பு :  புழுக்கள் வராமல் தடுக்கும்.

வளர்ச்சி ஊக்கியாக தயாரிக்கும் முறை


அனைத்து தழைகள் ஒவ்வொன்றிலும்; அரைக்கிலோ வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும் 

அவற்றுடன்  கோமியம் அரை லிட்டர்
நாட்டு சர்க்கரை அரைக்கிலோ
சோற்றுக் கற்றாழை மடல் 1
தயிர் அரை லிட்டர் 

செய்முறை

மேலே உள்ள ஒவ்வொரு தழைகளிலும்  அரைக்கிலோ அளவு எடுத்து நன்றாக இடித்து மண்பானையில்  போட்டு மூழ்கும் அளவு தண்ணீர்  ஊற்ற வேண்டும். 

அவற்றுடன் அரைக்கிலோ  நாட்டுச் சர்க்கரையையும், அரைலிட்டர் கோமியத்தையும் சேர்க்கவேண்டும்
அதன்பிறகு ஒரு சோற்றுக் கற்றாழை மடலில் உள்ள தோலை நீக்கி விட்டு சதை பகுதியை எடுத்து மிக்சியில் போட்டு அடித்து அவற்றையும் ஒன்றாக கலக்கி ஒரு வாரம் வரை வைத்திருக்க வேண்டும் .

தெளிக்கும் முறை


ஒரு வாரம் கழித்து  எடுத்து வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி  என்ற அளவில் கலந்து தெளிக்கலாம் 

தெளிக்கும் பொழுது ஒரு டேங்க்குக்கு ஒரு எலும்பிச்சம் பழம் சாறு எடுத்து கலந்து தெளிக்கலாம்.

Post a Comment

1 Comments

  1. புது தகவல் எனக்கு.
    பாராட்டுக்கள் பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete

Smart vivasayi