Things to look out for in watermelon cultivation Organically
தர்பூசணி - Watermelon
தர்பூசணி ஊடுபயிராக 10 டன்னும் அதுவே தனிப்பயிராக 15 டன்னும் மகசூல் வரும் நிறைவான வருமானத்தை கொடுக்கக்கூடியது . கோடையில் அறுவடைக்கு வருவதுபோல் பயிரிட்டால் மேலும் நாள் வருமானம் கிடைக்கும் .
தர்பூசணி ரகங்கள் - Varieties of watermelon
தர்பூசணி ரகங்கள் என்றுபார்த்தால் பூசா பேதனா, அம்ருத் அர்கா, மானிக், நியூ ஹாம்ப்ஷைர், மிட்ஜெட், சுகர் பேபி, அஷாஹ ஜயமாடோ, அர்கா ராஜஹன்ஸ், துர்காபுரா மீதா, கேசர், அர்கா போன்ற ரகங்கள் உள்ளன
தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரிய குளம் தர்பூசணி ரகம் உள்ளது இதை PKM -1 ரகம் என்றும் அழைக்கப்படுகிறது இது ஒரு அதிக மகசூல் தரக்கூடிய ரகமாகும்
இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி
1. டிசம்பர் மாதம் கடைசி வாரம் முதல் ஜனவரி மாதம் கடைசி வாரம் வரை நடவு செய்யலாம். நடவு செய்ய ஒரு ஏக்கருக்கு 1.75 கிலோ விதைகள் தேவைப்படும். அந்த விதைகளை ஒரு கிலோவிற்கு 10 கிராம் சூடோமோனாஸ் மற்றும் 30 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் அரிசி வடிகட்டிய கஞ்சியுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து நடவு செய்யலாம்.
2.நடவு வயலில் அடியுரமாக இரண்டு முதல் நான்கு டிராக்டர் லோடு மட்கிய தொழுவுரம் மற்றும் 60 கிலோ சாம்பல் , 2 கிலோ சூடோமோனாஸ் கலந்து பரப்பி முறையாக இரண்டு தடவை உழுத பின்பு 4 அடி அகலமும் ஒரு அடி உயரமும் உள்ள மேட்டுப்பாத்தி அமைக்கலாம்.
3.சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அதன் தொடர்ச்சியாக வைரஸ் நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், எட்டு நாட்களுக்கு ஒருமுறை ஆரம்பம் முதல் முடிவு வரை
பூச்சி விரட்டிகளை (வேப்ப எண்ணெய் கரைசல், பொன்னீம் கரைசல், ஐந்திலைக் கசாயம், கற்பூர கரைசல் ,அக்னி அஸ்திரம்) பயன்படுத்துவது நல்லது.
4.கருவாட்டுப் பொறி (20 ) ,
பழ ஈ காண பொறி(7) மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி(2) வைப்பது மிகவும் நல்லது.
5.போதுமான அளவு சாம்பல்சத்து கொடுப்பது பழத்தின் சிறப்பான வளர்ச்சிக்கும், சுவைக்கும் காரணமாக அமையும். நல்ல சாம்பல் தூளை
20 நாட்களுக்கு ஒரு முறை இலைகள் மேல் காலை பணி முடிந்தவுடன் தூவி விடுவது நல்லது.
6.பழ ஈ தாக்கத்தை குறைக்க பாதிக்கப்பட்ட பழங்களை உடனடியாக நிலத்தில் இருந்து அப்புறப்படுத்துவதும் அதற்கான பாதுகாப்பு திரவங்களை உடனடியாக தெளிப்பது பழ ஈ தாக்கத்தை குறைத்து நல்ல பழம் கிடைக்க உதவும்.
7.ஒரு ஏக்கரில் குறைந்தபட்சம் 10 டன் பழங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுவது மிகவும் சிறந்தது.
Comments
Post a Comment
Smart vivasayi