நறுமணம் மிக்க கஸ்தூரி வெண்டைக்காய்
வெண்டைக்காய் தெரியும். அதென்ன கஸ்தூரி வெண்டை. சமீபகாலமா மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டங்கள்ல விதவிதமான நாட்டுக் காய்கறிகள தேடி பயிர் செய்றாங்க. அந்த வகையில இந்த கஸ்தூரி வெண்டையை நிறைய பேர் விரும்பி விதைக்கிறாங்க.
பார்க்குறதுக்கு குட்டையா இருக்கும் இந்த வெண்டைக்காயை ஆண்டு முழுக்க சாகுபடி செய்யலாம். இதோட விதைகள் நறுமணம் மிக்கவைனு சொல்றாங்க. இதை வாசனை திரவியம் தயாரிப்புல பயன்படுத்துறாங்க. மூலிகையாகவும் ஆயுர்வேத மருத்துவத்துல பயன்படுத்தப்படுது. காய்கள் சாப்பிட மிகவும் ஏற்றது. விதைச்ச ரெண்டு மாசத்துக் குள்ள அறுவடைக்கு வந்துடும். இதன் விதைகள்ல இருந்து எண்ணெய்கூட எடுக்கப்படுகிறது .
எங்கே வாங்கலாம்
0 Comments
Smart vivasayi