Guava Natural Agriculture Taiwan Pink Guava Pest Control
படத்தில் காட்டியது போல் பிரவுன் கலர் மற்றும் சைஸ் இல்லாமலும் உள்ளது.
இயற்கை விவசாயமாக இருந்தாலும் செயற்கை விவசாயமாக இருந்தாலும் சரி பூச்சிகளை எதிர்த்து நம்மால் விவசாயம் செய்வது கடினமே . பூச்சி தாக்குதலுக்கு முன்பு சில அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும்
1) கருவாட்டு பொறி வாங்கி வைக்கவேண்டும் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 20 எண்ணிக்கையிலாவது கட்டி தொங்க விடவேண்டும்.
2) சூரிய ஒளியில் இயங்கக்கூடிய விளக்கு பொறி வைக்க வேண்டும்
3) பழ ஈ கான பொறிகள் வைக்கவேண்டும்
தாக்கிய பின்பு
1) கற்பூரக்கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் அல்லது வேப்பெண்ணை கரைசல் அல்லது பொன்னீம் கரைசல் ஏதாவது ஒன்றை தெளிக்கவேண்டும்
2) பவேரியா பேசியானா தெளிக்கணும் ஒருதடவை தெளித்தால் 7 மற்றும் 14 நாள் மீண்டும் ஒரு முறை கட்டாயம் தெளிக்க வேண்டும்
3) இதை தவிர்த்து சூடோமோனஸ் கொடுக்கவேண்டும்
இதெல்லாம் செய்யும்போது கொய்யா எந்தவித குறைபாடும் இல்லாமல் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கு
Smart Vivasayi




Comments
Post a Comment
Smart vivasayi