கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா வளர்ப்பு உர மேலாண்மையும்

Guava Organic Agriculture Cultivation - Guava Cultivation organic Fertilizer Management



கொய்யா செடி வளர்ப்பு முறை - Guava cultivation method


கொய்யா செடியில் இலைகள் படத்தில் காட்டியது போல் இலைகள் மொற மொற என இருந்தால் நீர் பற்றாக்குறையாக இருக்கிறது  .
அதாவது மண்ணிற்கு ஏற்றார்போல நீர் இல்லை  என்று அர்த்தம் . உணவு தயாரிக்கும் பொழுது வேரில் நீர் இல்லையென்றால் இப்படி கொய்யாவின் இலைகள் இப்படி தெரியும் . ஒருவேளை நீர் அதிகமாக கொடுத்தால் இலையை தொடும்பொழுது தோல் போன்று மெதுவாக இருக்கும் . எனவே கொய்யாவுக்கு தண்ணீர் தேவையான அளவு பார்த்து கொடுக்கவேண்டும்.


தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு - Amount of nitrogen or ash



கொய்யாவின் இலைகள் மஞ்சளாக இருந்தால் , தழைச்சத்து அல்லது சாம்பல் சத்து அளவு குறைவாக இருந்தால் அப்படி தோன்றும்  அதைக்கேற்றார் போல் இயற்கை விவசாய  இடுபொருட்கள் கொடுக்க வேண்டும் அப்டி கொடுத்தாலே சரியாகிவிடும் . ஒரு மரத்திற்கு இரண்டு லிட்டர் ஜீவாமிர்தம் . மேலும் 20 மில்லி மீன் அமிலம் , பஞ்சகாவிய , எது முடியுமோ அதை கொடுக்கலாம் . தெளிச்சு பத்து நாளைக்கு ஒரு முறை பஞ்சகாவியா அல்லது ஈ எம்  கரைசல் கொடுக்கலாம் 


கொய்யாவிற்கு பொட்டாஷ் மொபலைசிங் பாக்டீரியா - Potash mobilizing bacteria



பொட்டாஷ் மொபலைசிங் பாக்டீரியா கிடைச்ச ஏக்கருக்கு 1 லிட்டருக்கு கொடுக்கலாம் . 200 லிட்டர் தண்ணீரில் கலந்து  மரத்துக்கு 1 லிட்டர் ஊற்றி விடலாம் . சீராக கவனித்தால் கொய்யா செடி நன்றாக வரும் எல்லாவராமும் ஏதாவது இடுபொருள் கிடைப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும் 

Post a Comment

0 Comments