Ad Code

Ticker

6/recent/ticker-posts

கொய்யா இயற்கை விவசாயம் - கொய்யா கன்று நடும் வழிமுறை

கொய்யா கன்று நடும்  வழிமுறை - Guava seedling planting method





கொய்யா செடியின் ஆரம்பகால வேர்கள்


கொய்யா இயற்கை விவசாயம்


 கொய்யா கன்று நடும்பொழுது கண்டிப்பாக 2*2*2 அடி குறைந்த பச்சமாக அதிகபச்சமாக 3*3*3 அடி எடுக்கலாம் சரளை மண்ணாக இருந்தால் அதிகமாக எடுப்பது நல்லது குழி ஆழமாக எடுப்பதும் நல்லது அப்படி எடுப்பதால் செடியின் ஆரம்பகால வேர்கள் நகர்ந்து போவதற்க்கு வசதியாக இருக்கும். குழி தோன்றிவிட்டு இரண்டு நாட்கள் வைத்திருந்து அந்த மண்ணை திருப்பி இழுத்து விடவேண்டும் ஒரு முக்கால் குழி மூட வேண்டும் 

சூடோமோனஸ் 10 கிராம்

கொய்யா இயற்கை விவசாயம்


இப்பொழுது கொய்யா நாற்றை நடுவில் வைத்துவிட்டு அந்த குழி 3*3*3 அடி இருக்கும் காய்ந்த நாடு மாட்டு சாணம் அதுகூட சூடோமோனஸ் 10 கிராம் அல்லது அசோஸ்பைரில்லும் 50 கிராம் பாஸ்போபாக்ட்ரியா 50 கிராம் 10 கிராம் சூடோமோனஸ் இத கலந்து குழியோட வெளி விளிம்புல சுத்திவர போட்டு இப்போ மண்ணை இழுத்துவிட்டு மண்ணை இறுக்கமாக அழுத்திவிடவேண்டும் 

மிச்ச மண்ணை வைத்து  ஆறடி விட்டமுள்ள ஒரு வட்டப்பாத்தி போடலாம் . முடித்தவுடன் உயிர் தண்ணிர் கொடுக்க வேண்டும் மற்றும் மூணாவது நாளும் கொடுக்க வேண்டும் 

Post a Comment

0 Comments