Ad Code

Ticker

6/recent/ticker-posts

சுவையான தக்காளி செடி வளர்ப்பு

tomato cultivation methods




தக்காளி , வெங்காயத்திற்கு அப்புறம் நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் காய்கறி . நம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் சுவை நன்றாக இருக்கவேண்டுமென்றால் கெமிக்கல் விவசாயத்தை தவிர்த்து இயற்கை விவசாயத்தை செய்யலாம் . நமக்கு தேவையான தக்காளியை நாமே நம் வீட்டின் பின்புறத்திலோ அல்லது மாடியில வளர்க்கலாம் . நாம் இந்த கட்டுரையில் சுவையான தக்காளி செடியை எப்படி வளர்க்கலாம் என்று பார்க்கலாம் .


நல்ல தக்காளி கன்று மற்றும் ரகத்தை  தேர்ந்தெடுங்கள் 



மிகவும் ஒல்லியான கன்றை தேர்ந்தெடுக்க வேண்டாம் , உயரமான தக்காளி கன்றை தவிர்த்து கொஞ்சம் சின்ன தக்காளி நாற்றுகளை தேர்வுசெய்யலாம் . அதிக வேர்கள் உள்ள செடியையும் தவிர்த்துவிடுங்கள்  . அல்லது விதைகள் வாங்கி நேரடியாக கூட விதைக்கலாம் . தக்காளியை பொறுத்தவரை நூறுக்கு மேற்பட்ட ரகங்கள் உள்ளன உங்கள் தேவைக்கேற்ப அதை தேர்ந்தெடுக்கலாம்


வெளிச்சம் 


நீங்கள் வீட்டுத்தோட்டத்தில் தக்காளி செடியை வளர்க்க குறைந்தது 6 மணி நேரம் சூரிய வெளிச்சம் உள்ள பகுதியை தேர்ந்தெடுங்கள் . இதனால் அதிக தக்காளி பழங்கள் வருவதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்


மண் 


உங்களுடைய மண் அல்லது மண் கலவைதான் உங்கள் தக்காளியின் நிறம் , சைஸ் மற்றும் சுவை போன்றவற்றை தீர்மானிக்க கூடியது . ஒருவேளை மண் சரி இல்லையெனில் நாம் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காது . வீட்டுத்தோட்டத்தில் தொட்டியில் நடுவதாக இருந்தால் மண்புழு உரம் , கோகோபீட் , மணல் இந்த மூன்றையும் சரிவிகிதத்தில் கலந்து நடவு செய்யலாம் . தரையில் நடும்பொழுது மண்புழுஉரம் கலந்து நடலாம் .



Mulching Tomatoes 



தக்காளி செடிக்கு Mulching செய்வது அவசியம் . வீட்டுத்தோட்டம்னா நியூஸ் பேப்பர் வச்சு கூட Mulching பண்ணலாம் . மண்ணினை ஈரப்பதமாக வைத்திருக்கும் , களைகள் வராமல் தடுத்து  , தக்காளி பழங்களை பாதுகாக்கும் .  நியூஸ் பேப்பர் இல்லைனா paddy straw , peat moss கூட போடலாம் .


Tomato Watering 


ஒரு soil wet மீட்டர் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் அது உங்கள் வீட்டு தோட்டத்திற்கு உதவும் , வெயில் காலத்தில் மட்டும் அதிகம் நீர் தேவைப்படும் . நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் செடி மற்றும் பழங்களில் வெடிப்பு ஏற்படும் . இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒரு முறை நல்ல தரை நனையும் படி மெதுவாக நீர் ஊற்றலாம் 


உங்கள் தக்காளி செடியை தினமும் கவனிக்கவேண்டியவை 


1) நல்ல தக்காளி செடிகளை தேர்வு செய்யுங்கள் 


2) வீட்டில் தக்காளி செடி நல்ல இடத்தை தேர்வு செய்யுங்கள்.


3) செடியை சுற்றி Mulching கட்டாயம் செய்யவேண்டும் 


4) தக்காளி கன்று நடும்பொழுது நல்ல இயற்கை உரம் இட்டு நடவேண்டும் .


5) தக்காளி கன்றை நல்ல ஆழமாக நடுங்கள் புது வேர் நன்றாக பரவி வளரும் 


6) வெப்ப நிலையை மற்றும் மண்ணை பார்த்து நீர் விடுங்கள் .


7) செடி பெரிதாக வளர்ந்தவுடன் அடியில் உள்ள இலைகளை எடுத்துவிடவேண்டும் .


By

Smart Vivasayi




Post a Comment

0 Comments