Skip to main content

மாடித்தோட்டமும் மண் கலவை வகைகளும்

Terrace and soil mix types



மாடி தோட்டத்தை பொறுத்தவரை ஒரு மண் கலவை தேர்ந்தெடுத்தல் என்பது உங்கள் மாடித்தோட்டத்தை எவ்வளவு காலம் சரியாக கொண்டு செல்விர்கள் என்பதை முடிவு செய்யக்கூடியது . எனவே மாடித்தோட்டத்தில் சரியான மண் கலவை என்பது  உங்கள் விதையை விரைவாக முளைக்க செய்யும் , நன்றாக வளர செய்யும் , பூக்க செய்யும் , காய்க்க செய்யும் . நாம் இந்த கட்டுரையில் மண் கலவையில் உள்ள நன்மைகளும் மற்றும் என்ன வகையான மண் கலவைகள் பயன்படுத்தலாம் என்பதை நாம் பார்ப்போம் . 




1) சிறந்த மாடி தோட்ட மண் கலவையென்பது களைகள் இன்றி இருப்பது . ஆனால் மண் , மணல் பயன்படுத்தும் போது களைகள் அதிகம் வரலாம் இதற்கு நீங்கள் மண் கலவையை தொட்டி அல்லது பையில் போட்டு மூன்று நாள் தொடர்ந்து தண்ணீர் விடுங்கள் களை விதைகள் இருந்தாள் முளைத்துவிடும் பின்பு நீங்கள் விதைகளை தூவலாம் .



2) மண் கலவைகள் மட்டுமே பயன் படுத்தும் போது சில விதமான பிரச்சனைகள் ஏற்படலாம் .

  A ) ஆரம்பத்தில் மண்கலவை நன்றாக இருந்தாலும் போக போக மண் இறுகி போய்விடும் செடிகளால் சரியாக சுவாசிக்க முடியாது . வெண்டை , கத்தரி , முள்ளங்கி போன்ற ஒருபருவ பயிர்களுக்கு பயன்படுத்தலாம். ஆனால் பூச்செடிகள், பழங்கள் , பயிர் செய்தால் மண் கலவையை தவிர்த்துவிடலாம்.




B ) மண் கலவையில் எடை சற்று கூடுதலாக இருக்கும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது கடினம் . அதே போல் ஒரு பையிலிருந்து மாறுவது சிரம்மமாக இருக்கும் .

மாடித்தோட்டத்திற்கு செடி நட என்னவிதமான கலவைகள்  பயன்படுத்தலாம் 

1) மண் 

2) மணல் 

3) ரெட் சாயில் 

4) கோகோ பிட் 

5) மண் புழு உரம் 

6) பெர்லைட் 

7) வெர்மிகுலேட்

மேல் கூறிய ஏதாவது மூன்றை 1:1:1 என்ற சதவிகிதத்தில் கலந்து கொள்ளலாம் .

கலவை 

a) மண் +மணல்+ரெட் சாயில்
b) மண் +மணல்+மண் புழு உரம் 
c) மண் +மணல்+பெர்லைட்
d) மண் +மணல்+வெர்மிகுலேட்
e) கோகோ பிட்+மண் புழு உரம்+பெர்லைட் (1:2:1)
f) கோகோ பிட்+மண் புழு உரம்+வெர்மிகுலேட் (1:2:1)
g) மண் புழு உரம்+பெர்லைட் (1:1)
h) மண் புழு உரம்+வெர்மிகுலேட் (1:1)
i) கோகோ பிட்+பெர்லைட் (1:1)
j) கோகோ பிட்+வெர்மிகுலேட் (1:1)
k) கோகோ பிட்+மண் புழு உரம் (1:1)

மேலே  சொன்னவற்றில் எந்த கலவை வேண்டுமென்றாலும் நீங்கள் மாடித்தோட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் . பழ மரங்கள் , பூ வகைகள் செம்பருத்தி , மல்லிகை , பந்தல் காய்கறிகள் போன்றவற்றை பயிர் செய்ய a ,b ,c , d  மண் கலவைகளை பயன்படுத்தி கொள்ளலாம் .

Comments