Ad Code

Ticker

6/recent/ticker-posts

தென்னை பாலை உதிர்வதை தடுப்பது எப்படி

குறும்பை எதனால் உதிர்கிறது 




Coconut cultivation tips

தென்னையில் குரும்பை உதிர்வது என்பது ஒரு நாளில் நடக்கும் விஷயமில்லை அது தென்னையோட மொத்த பராமரிப்பு அல்லது அதனுடைய சத்தை பொறுத்தது  நாம் மண்ணுக்கேற்ற மாதிரி அடிப்படை சத்துக்கள் கொடுக்காம வெறும் தண்ணிய மட்டும் கொடுத்துக்கொண்டே இருந்தோம்னா அந்த பயிர்ல காய்கள் நிற்பதற்கான காரியங்கள் எதுவும் நடக்காது 

இடுபொருள் கொடுக்கணும் - Organic Fertilizer


ஒரு மாதத்துக்கு அல்லது குறைந்தபச்சம் ஒரு வாரத்துக்கு ஒருமுறைன்னு  ஒரு இடுபொருள் கொடுக்கணும் உதாரணமாக ஜீவாமிர்தம் கொடுத்தால் ஒரு மரத்துக்கு குறைந்தபாசம் 3 லிட்டர் கொடுக்கலாம் , அதேகபச்சமாக 5 லிட்டர். அடுத்தவாரம் மீன் அமிலம் ,அடுத்தவாரம் அடுத்தவாரம் பஞ்சகாவியா , அடுத்து EM  கரைசல் இந்த மாதிரி மூணு வாரத்துக்கு மூணு கொடுகிறோம்னு வைங்க ஒவ்வொண்றும் ஒரு ஒரு மரத்துக்கு 20 மில்லி அளவுல தரணும் . அல்லது ஏதாவது ஒரு பொருள்ளக்கூட அந்த அளவுக்கு கொடுக்கலாம் , ஆனால் கட்டாயமாக கொடுக்கணும் . என்ன சொல்ல வாரேன்னா வெறும் தண்ணியாக கொடுக்காமல் அதனுடன் கலந்து கொடுத்து வாரம் வாரம் தென்னை மரத்தை கவனிக்க வேண்டும் .

சூடோமோனஸ் 




பொதுவாக இப்படி கொடுக்க ஆரம்பித்தாலே மரம் தெளிவாயிடும் மரத்துக்கு தேவையான அணைத்து சத்துக்களும் கிடைக்க ஆரம்பித்துவிடும் இப்ப மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு நேரத்தில  20 மில் சூடோமோனசை தண்ணியில் கலந்து வேரை  சுற்றி ஊற்றிவிடவேண்டும் அப்ப நமக்கு வேரில் இருக்ககூடிய பூஞ்சை தாக்குதல்கள் ,நோய்கள் இதெல்லாம் போயிருச்சனா கொடுக்கற பொருள் கேட்க்கும் அப்ப தென்னை நமக்கு முழுசா நல்ல வளரும் . இந்த மாதிரி நேரத்துல

எருக்கு இலை கரைசல்



 எருக்கு இலை கரைசல் 200 லிட்டர் drum பத்து கிலோ அளவுள்ள உடைச்சா பால் வரக்கூடிய இளம் எருக்கு   தண்டு, காய், இலை நுனிப்பகுதி குட்டி குட்டி பகுதியா நறுக்கி உள்ள போட்டு 200 லிட்டர் தண்ணீரில் 5 நாள் ஊறவைக்கலாம்  அந்த தண்ணீரை மரத்துக்கு 5 லிட்டர்னு தரையில ஊற்றலாம் இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்யும்போது . ஒரு மாதத்திலேயே வித்யாசம் தெரியும் குரும்பைகள் கொட்டுவது நிக்கும்.

போராக்ஸ்


அல்லது என்னுடைய பகுதியில எருக்கு இலை கிடைக்கலனா கடைகளில் போராக்ஸ் அப்படினு ஒரு பொருள் கிடைக்கும் அதை 100 கிராம் வாங்கி 5 அல்லது 10 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து குழி தோண்டி உள்ள போட்டு  மூடி தண்ணீர் கொடுக்கலாம் இது மாசத்துக்கு ஒருதடவை கொடுக்கலாம் .இதே மாதிரி ஐந்து மாசத்துக்கு தொடர்ந்து பண்ணலாம் . எருக்கு இலை கரைசலும் இது மாதிரி கொடுக்கலாம் . இப்படி கொடுக்கும்போது நீங்கள் பயிரிட்டுருக்கும் ரகத்திற்கு ஏற்றார் போல் காய்கள் வெட்டுக்கு வருமோ அது வந்துவிடும் 

செம்மண் நிலம்  -  Red soil 


வருடம் முழுவதும் காய் வரக்கூடிய 3 அல்லது 4 வருடத்துக்கு அதிகமான தென்னை மரங்கள் எல்லாத்துலயுமே இந்தமாதிரி இடுபொருட்களை தொடர்ந்து கொடுப்பது முக்கியம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திற்கு ஒன்றரை கிலோவிற்கு கல்லு உப்பு இருக்குள்ள அதை எடுத்து மண்ணை லைட்டா தோண்டி போட்டு நீர் விடலாம் இது செம்மண் நிலத்துக்கு உபயோகமா இருக்கும். சாம்பல் இருந்தால் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது 40 ஒரு முறை செம்மண் நிலம்னா இரண்டு கை எடுக்கற அளவுல எடுத்து அதை வட்ட பாத்தில போட்டு தண்ணீர் கொடுக்கலாம். 

பொட்டாஷ் பாக்ட்ரியா - Potash bacteria


அல்லது பொட்டாஷ் பாக்ட்ரியா 20 மில்லி தன்னீர்ல கலந்து பூமில கொடுக்கலாம் இதெல்லாம் என்ன செய்யும்னா மரத்தை கொஞ்சம் வலுவாக்கும். நிறைய பேரோட தென்னை மரங்கள்ல தேங்காய் விழுவதற்க்கு காரணம் என்னான்னா பாலைகளுடன் ஒட்டியிருக்கக்கூடிய தேங்காய்கள்ல ஒரு இஸ்த்திரத்தன்மை இல்லாமல் இருப்பது அதை கட்டுப்படுத்த கொடுப்பது சாம்பல் 

செம்மண் நிலமாக இருந்தால் 200 லிட்டருக்கு 3 கிலோ செவத்துக்கு அடிக்கிற சுண்ணாம்பு தண்ணீரில் கலந்து இரன்டு அல்லது மூணு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மரத்திற்கு 2 லிட்டர் தரையில ஊற்றிவிடலாம் இதனால் மரத்திற்கு தேவையான சுண்ணாம்பு சத்தும் கிடைக்கும் 

இதெல்லாம் செய்வதால் பொதுவா மரத்திற்கு தேவையான அனைத்தும் கொடுத்துவிடுவோம் இதனால் பாலை விழுவது குறைந்து காய்கள் நன்றாக காய்க்கும் 


Post a Comment

0 Comments