முருங்கை ஒரு கோடைகால பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது. மேலும், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலும் கொடுக்கக்கூடியது. பூக்கும் தருணத்தில் மழை இருந்தால் விளைச்சல் மிகவும் பாதிக்கப் படும். இப்பயிருக்கு நல்ல வளமான வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் மண் நிலம் சாகுபடிக்கு ஏற்றவை.
முருங்கை இரண்டு முறையில் பயிர் பெருக்கம் செய்யப் படுகிறது. பல்லாண்டு முருங்கை தண்டு போத்து மூலமாகவும், செடி முருங்கை விதைகள் மூலமாகவும் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. செடி முருங்கை கோடை காலத்தில் பூப்பதற்கு ஏற்ப செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி) மாதங்களில் பயிரிடுவது நல்லது. மேலும், ஜுலை (ஆடிப்பட்டம்) மாதத்திலும் விதைகளை நடவு செய்யலாம். செடி முருங்கையில் நன்கு முற்றிய காய்களை அறுவடை செய்து, காய வைத்து விதை களை பிரித்தெடுக்க வேண்டும். தரமான விதைகளை தேர்வு செய்து சுமார் 15 செ.மீ நீளமும், 10 செ.மீ அகலமும் உள்ள மக்கும் பைகளில் விதைத்து நாற்றுக்களாக வளர்த்து ஒரு மாதம் முடிந்த பின்பு நடவினை மேற்கொள்ளலாம். வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும்.
ஆடிப்பட்டத்தில் முருங்கை சாகுபடி
நுனி கிள்ளுதல் : செடிகள் 60 செ.மீ உயரம் (நடவு செய்த மூன்றாவது மாதம்) வளர்ந்தவுடன் துளிர் நுனியைக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்கக் கிளைகள் தோன்றி அதிக காய்கள் உற்பத்தியாகும். தேவைப்பட்டால் மறுமுறையும் 4 அடி உயரத்தில் நுனிகளைக் கிள்ளி விடலாம். நடவு செய்த மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அல்லது கிளைகள் படர்ந்து நிழல் அதிகரிக்கும் வரை குறுகிய காலப் பயிர்களான தட்டைப்பயிறு, உளுந்து, பாசிப்பயறு, வெண்டை, கீரை மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
வழக்கமான நீர் மேலாண்மை, களை மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். செடி முருங்கை விதைத்த ஆறு மாதங்களில் அறுவடைக்கு வரும்.மேலும்,அறுவடைப் பருவம் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். காய்களை மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம்.
மறு தாம்பு : முதல் ஆண்டில் காய்கள் அறுவடை முடிந்த பிறகு தரையிலிருந்து 90 செ.மீ உயரத்தில் வெட்டிவிட வேண்டும். வெட்டிய பகுதியில் வேண்டும்.
கவாத்து செய்த நீர் பாய்ச்ச வேண்டும். இவ்வாறு கவாத்து செய்த மரங்கள் மறுபடியும் தளைத்து முதலாண்டு போலவே பூத்து, காய்த்து விளைச்சல் கொடுக்கும்.
இரண்டாம் ஆண்டு இறுதியில் செடியின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பை பொறுத்து இரண்டாம் கவாத்து செய்யலாம். முதல் பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட சாகுபடி முறைகளையே மறு தாம்புப் பயிருக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi