Ad Code

Ticker

6/recent/ticker-posts

வயலில் எலியை ஒழிப்பது எப்படி

எலி தொந்தரவு வயல்களில் கட்டுப்படுத்த





கிளைரிசீடியா நுனி பகுதியில் உள்ள   தண்டு பகுதியை ஒரு கால் கிலோ அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள். இலைகள் இருக்க கூடாது சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு இரண்டு அல்லது நான்கு லிட்டர் கொள்ளளவு உள்ள பாத்திரத்தை எடுத்து கொண்டு நீரை ஊற்றி கொதிக்கவிடுங்கள் நன்றாக கொதித்தவுடன் நீங்கள் வெட்டிவைத்திருக்கும் கிளைரிசீடியா துண்டுகளை  கொதிக்கும் நீரில் போடுங்கள் , போட்டு ஒரு அரைமணி நேரம் சாறு இறங்கும் வரை கொதிக்க விடுங்கள் . அப்புறம் முழு கோதுமையை அதில் போட வேண்டும் , மீண்டும் கோதுமை வேகும் அளவிற்கு நன்றாக கொதிக்க விடவேண்டும். ரொம்ப கூழாக வேண்டாம் கோதுமை நசுங்கும் பதத்திற்கு இருந்தால் போதும் . அந்த பதம் வந்தவுடன் இறக்கி ஆறவைத்து விடுங்கள். எலி மிகவும் மோப்பசக்தி வாய்ந்தது ஆறியவுடன் கையால் தொடுவதை தவிக்கவும் . ஆறியவுடன் ஒரு தட்டுல கொட்டி அதில் உள்ள குச்சிகளை எடுத்துவிடுங்கள் . இதை அப்படியே எடுத்து கொண்டு வயலில் ஆங்காங்கே வைக்கலாம் . இதை சாப்பிட கூடிய எலிகள் இறந்துவிடும் . இதை செய்றதுக்கு  முன்னாடி வெறும் கோதுமையை ஆங்காங்கே வையுங்க மறுநாள் சாப்ட்டுருக்காணு பாருங்க , சாப்டுருந்தா இரண்டு  நாட்கள் பழக்கபடுதிவிட்டு இதை செய்யலாம் 

Post a Comment

0 Comments