Ad Code

Ticker

6/recent/ticker-posts

கொய்யா சாகுபடி -கொய்யா பழம் அதிக எடை வர

கொய்யா அதிக எடை வர




கொய்யா L49 ஆக இருந்தால் 400 கிராம் வர வேண்டும் இதே போல் அங்காகிரான் தைவான் பிங்க்காக இருந்தால் 225 கிராம் வர வேண்டும் இதை வந்து நாம் இலக்காக வைத்து கொண்டு தோட்டத்தை நான்காக பிரிங்கள் (உதாரணமாக 1 ஏக்கராக இருந்தால் 25, 25 Cent ஆக பிரிக்கலாம் ) இப்படி பிரித்து எந்த பகுதியில் நல்ல விளைச்சல் வருகிறது என்று பாருங்கள் எந்த பகுதியில் சைஸ் கிடைக்காமல் இருக்குனு பாருங்க ,அதற்கு இன்னும் என்ன செய்ய வேண்டும் பாருங்க சரியாக காய்க்காத மரங்களை கவனித்து சரியான ஊட்டச்சத்துகளை கொடுக்க வேண்டும் . உதாரணமாக படத்தை பாருங்கள் கொய்யா காய் ஒரே நீளமாக இருக்கிறதா அது எப்படி இருக்க வேண்டுமென்றால் காம்போடு ஒட்டிய பகுதி விரிந்து இருக்கவேண்டும் முனி கொஞ்சம் கூம்பி இருக்க வேண்டும் . அப்ப மேல் பகுதி விரிய வேண்டுமானால் சாம்பல் சத்தும் தழைச்சத்து இருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தால் உருண்டையாக இருந்து தேவையான எடை கிடைத்திருக்கும்

அடுத்ததாக ஒருமரத்தில் இருக்கவேண்டிய காய்களின் எண்ணிக்கை , குறைந்தபாசம் 80 முதல் 100 காய்கள் இருக்க வேண்டும் அதாவது பறிப்பது போல் இருக்கவேண்டும் அதற்காக நாம் தேவையான இடுபொருட்கள் கொடுக்க வேண்டும் .




Post a Comment

0 Comments