நம் வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்ற மரங்கள் என்னென்ன ?

best trees to plant near house foundationமரங்கள் நமக்கு நல்ல நிழல் தரும் , தேவையான உணவு தரும் , மரச்சாமான்கள் தரும் , இவை எல்லாவற்றிக்கும் மேல் நமக்கு தூய்மையான ஆக்ஸிஜன் தரும் . நாம் எல்லாருக்குமே ஒரு ஆசை இருக்கும் வீட்டின் முன்னாடியோ அல்லது பின்னாடியோ கொஞ்சம் இடம் இருந்தால் மரம் வளர்க்கலாமா என்று தோன்றும்  . குறைந்தது ஒருமரமாவது வளர்க்கலாம் என்று நினைப்பவர்களுக்கு என்ன வகையான மரங்கள் வளர்க்கலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம் .


வீட்டில் வளர்க்க எப்படி மரங்களை தேர்ந்தெடுக்கலாம் .


வீட்டின் முன்புறமாகவோ அல்லது பின்புறமாகவோ இருந்தாலும் சரி நீங்கள் வளர்க்கபோகும் மரத்தை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கீழ் வருமாறு பிரித்து கொண்டால் என்ன மரம் நடலாம் என்பதற்கு வசதியாக இருக்கும் 


1) நிழல் + பழங்கள் தரக்கூடிய மரங்கள் 

2) நிழல் +நிறைய ஆக்ஸிஜன் தரும் மரங்கள் + மரச்சாமான்கள் 

3) நிழல்+ அழகான பூக்கள் பூக்கக்கூடிய மரம் 

4) நிழல் + அதிக வருவாய் தரக்கூடிய மரங்கள் 


1) நிழல் மற்றும் பழங்கள் தரக்கூடிய மரங்கள். நீங்கள்  பழங்கள் தரக்கூடிய மரங்களில் முதலில் நாம் தேர்ந்தெடுப்பது மாமரமாகத்தான் இருக்கும் கோடை காலத்தில் நல்ல பழங்கள் தரும் இதை தவிர்த்து நாவல் மரம் , பலா மரம் , அத்தி மரங்களை கூட நடலாம் . இதை தவிர்த்து நெல்லி மரம் நடலாம் . மேல் சொன்ன மரங்கள் அனைத்தும் நிறைய பழங்கள் தரக்கூடியது தேவைக்கு போக மற்ற பழங்களை விற்கலாம் சிறு வருமானமும் கிடைக்கும் . இந்தவகை மரங்களை வீட்டிற்கு முன்னும் பின்னும் வைக்கலாம் . இதை தவிர்த்து புளிய மரம் வைக்கலாம் , இந்த மரத்தை வீட்டிற்கு பின்புறம் வைக்கலாம் .


2) நிழல் +நிறைய ஆக்ஸிஜன் தரும் மரங்கள் + மரச்சாமான்கள் நிழல் மட்டும் போதாது எனக்கு சுவாசிக்க சுத்தமான காற்றை உற்பத்தி செய்யக்கூடிய மரங்கள் வைத்தால் நன்றாக இருக்கும் நினைப்பவர்கள்  வேப்ப மரம் காற்றை சுத்தப்படுத்தி நிறைய ஆக்ஸிஜன்  வெளியிடும் மரம் . அடுத்ததாக புங்கன்  மரம் இரவு பகல் முழுவதும் ஆக்ஸிஜன் அதிக அளவு வெளியிட கூடிய மரம் . அரசமரம்  நல்ல நிழல் மற்றும் காற்று தரக்கூடியது . மாமரமும்  நல்ல தூய்மையான ஆக்ஸிஜன் தரக்கூடிய மரம்தான் .தூங்கமூஞ்சி மரம் இந்தமரமும் இரவில் ஆக்ஸிஜன் தரக்கூடிய மரம்தான்  இந்தவகைகளில் மரங்களை வீட்டிற்க்கு முன் வைப்பது நல்லது 


3) நிழல்+ அழகான பூக்கள் பூக்கக்கூடிய மரம்அதிகம் பேர் விரும்புவது அழகான பூக்கள் பூக்கக்கூடிய மரத்தை வைக்கவேண்டும் என்பதுதான் . பூக்கள் நிறைந்த மரங்கள் என்றாலே கொன்றை மரங்கள்தான் அதன் மஞ்சள் நிற பூக்கள் மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கும் , மயில் கொன்றை மரங்களும் இந்த ரகம்தான் . அடுத்ததாக பன்னீர் புஸ்பம் , செண்பகம்  , மகிழ மரம் நடலாம் .  


4) நிழல் + வருவாய் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய மரங்கள்பழங்கள் தரும் மரங்களாக இருந்தாலும் சரி , நிழல் மரங்களாக இருந்தாலும் சரி எல்லா மரங்களுக்கும் ஒரே அளவிலான தண்ணீர்தான் கொடுக்கப் போகிறோம். அதனால் பழம் கொடுக்கும் மரங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பணம் கொடுக்கும் மரங்களுக்கும் கொடுக்கலாம். முன்பு, சந்தன மர வளர்ப்புக்குத் தடை இருந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னரே நீக்கப்பட்டுவிட்டது. அதனால், வீட்டில் சந்தன மரங்களை நடலாம். குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து அது ஒரு முதலீடாக மாறும். உதாரணமாக சந்தன மரங்களை வீட்டில் வளர்ப்பதற்கு வனத்துறையிடமே மரக்கன்றுகள் வாங்கி நடலாம். வளர்த்து வெட்டும்போது, அவர்களை வைத்தே வெட்டி வனத்துறையிடம் கொடுத்து விற்பனை செய்யலாம். விற்பனை விலையில் அவர்களுக்கு 20 சதவிகிதம் போக, நமக்கு 80 சதவிகிதம் வருமானம் கிடைக்கும். மரச்சாமான்கள் செய்ய மகோகனி , வேம்பு, மலைவேம்பு, வாகை,குமிழ் போன்ற மரங்களை நடலாம் 


மகிழம் பூ - வருடம் முழுவதும் பூ இருக்கும்.... இலையுதிர் காலத்தில் மிகவும் குறைந்த இலைகளே கீழே விழும்.


அந்தி மந்தாரை ... வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது...


சரக்கொன்றை அல்லது சித்திரைப் பூ ...


இந்த மூன்று இல்லத்தின் முன் வைக்க ஏற்ற / காற்றில் உடைந்த விழாத மரங்கள் .


தங்களின் அருகாமையில் உள்ள நர்சரியில் எளிதாக கிடைக்கும்.


சர்க்கரைப் பழம் (West Indian  Cherry) ... ஆறு மாதங்களில் பூத்து காய்த்து....பல பறவைகளின் பசியாற்றும் இதையும் முயற்சிக்கலாம்.


மரங்கள் வீட்டின் சுவற்றை பாதிக்கும்மா ?


இது அனைவரும் ஏற்படும் சந்தேகம் வீட்டிற்கு முன் ஒரு மரம் வைக்கிறோம்  அதன் வேர்கள் வீட்டை பாதிக்குமா இதற்க்கு சரியான கவனிப்பு இல்லையெனில் கட்டாயமாக பாதிக்கும் . இதை தவிர்க்க நீங்கள் வைக்கும் கன்றை சுற்றி ஒரு வருடத்திற்க்கு  ஒரு முறை வாய்க்கால் எடுங்கள் இதனால் வீட்டை நோக்கி செல்லும் வேர்கள் அறுந்து விடும் . மற்ற வேர்கள் கீழ் நோக்கி செல்லும் வீட்டிற்கு எந்த பாதிப்பும் வராது . புங்கன் , மகோகனி , தூங்கமுஞ்சி போன்ற 30 முதல் 50 அடி வரை வளரக்கூடியது . மரங்கள் வளர வளர பக்க கிளைகளை வெட்டி விடலாம் மரம் மேல் நோக்கி வளர்ந்த கிளைகள் பரப்பி நல்ல நிழல் தரம் வீட்டிற்கும் எந்தப்பாதிப்பும் வராது 
G.M

Smart vivasayi

Post a Comment

1 Comments

Smart vivasayi