ஒருங்கிணைந்த பண்ணையம் - Integrated Farm
விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. அதாவது, பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.
பல வகை வருமானம்
ஒரு விவசாயிக்கு வருமானம் என்பது பல வகைகளில் இருக்கவேண்டும். அவை
*1.தினசரி*
*2.வாரம் ஒருமுறை*
*3 .மாதம் ஒருமுறை*
*4 .ஆறு மாதங்களுக்கு ஒருமுறை*
*5 .வருடம் ஒருமுறை*
*6 .மூன்று* *வருடங்களுக்கு ஒரு முறை* என ஆறு வகைகளில் வருமானங்கள் வரவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மழை இல்லாமல் போனாலோ அல்லது பயிர் பொய்த்து போனாலோ நஷ்டம் ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.
ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயம் சார்ந்த ஏதோ ஒரு தொழில் இருக்கவேண்டும்
உதாரணமாக
தேங்காயில் இருந்து கொப்பரை எடுப்பது
பாலில் இருந்து வெண்ணை மற்றும் மோர் எடுப்பது
கரும்பில் இருந்து வெல்லம் எடுப்பது
போன்ற ஏதோ ஒரு சிறு தொழில் அமைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இப்படி சிறு தொழில் அனைத்தும் விவசாயிகள் கையில் இருந்த காலம் போய் விவசாயி அல்லாதவர்கள் செய்வதால் குறுகிய காலத்தில் அதிக லாபம் எடுத்து சென்று விடுகிறார்கள்.
ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது ஒரு விவசாயி அவர் சார்ந்த பல தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்ற ஒரு பொருளில் மட்டும் எடுத்து கொள்ளாமல் விவசாயிகள் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை இங்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி சொல்ல ஆசைப்படுகிறோம்.
தின வருமானம்
தினம் வருமானம் என்ற முறையில் சில கறவை மாடுகள் வைத்து பால், மோர், வெண்ணை என வியாபாரம் செய்யலாம், மீன் வளர்ப்பில் ஈடுபட்டு தினம் வருமானம் தேடலாம். காய்கறிகள், கீரைகள் சுழற்சி முறையில் பயிரிட்டு தின வருமானத்தை அதிக படுத்தி கொள்ளலாம்.
வார வருமானம்
கோழி, காடை, வாத்து, வான்கோழி, போன்றவற்றை வளர்த்து வருமானம் ஈட்டலாம், சுழற்சி முறையில் வாழை பயிர் செய்து வந்தால் வாரம் ஒருமுறை வருமானம் பார்க்கலாம்.
*மாத வருமானம் :*
சிறுதானியங்கள் பயிறு வகைகள் போன்றவற்றை பயிர் செய்து மூன்று மாதங்கள் ஒரு முறை வருமானம் பார்க்கலாம்.
*வருட வருமானம் :*
நீண்ட கால பயிர்களான மரங்களை வளர்து 5 வருடங்கள் ஒரு முறை நல்ல வருமானம் ஈட்டலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. திட்டமிடுதலில் இதன் வரிசையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் பலன் கிட்டும்.
நிலத்தின் அளவு,
2. நிலத்தின் தற்போதய அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம்,சாலை வசதி,தடுப்பு வேலி,பாது காப்பு,மண்.
3. பண்ணையில் ஈடுபடும் குடும்ப உறுப்பினர்களின் பங்களிப்பு, பணியாளர்களின் எண்ணிக்கை
4. திட்டமிடப்படும் அல்லது எதிர்பார்க்கப்படும் வருமானம் இது நபருக்கு நபர் வேறுபடும் காரணம் அவரவர் விவசாயத்தை முழுமையாகவோ பகுதியாகவோ சார்ந்திருப்பதனால்.(தின,வார,மாத,மூன்று,ஆறு மாதம் மற்றும் வருடம்)
5. மிக முக்கியமான முதலீடு
மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெறலாம். சில குறைகளை நிவர்த்தி செய்து கொண்டால் விவசாயத்திலும் வெற்றி என்பது சாத்தியமே…
Comments
Post a Comment
Smart vivasayi