Ad Code

Ticker

6/recent/ticker-posts

காளான் வளர்ப்பில் பூச்சி கட்டுப்பாடு

காளான் வளர்ப்பு



சைவ பிரியர்கள் மட்டும் விரும்பி உண்னும் உணவல்ல காளான் சில பூச்சிகளும் நாம் குடில்களில் வளர்க்கும் காளான்களை சாப்பிட கூடியது . பொதுவா காளான் என்பது ஒரு பூசண வகையை சார்ந்த நுண் உயிரி இதில் பல்வேறு சுற்றுப்புற சூழல்களால் பூச்சி நோய்கள் தோன்றி காளான்களை அழிக்கும் எனவே சுற்றுப்புறங்களை நாம் சுத்தமாக வைத்திருந்தாலே நாம் இவற்றை கட்டுப்படுத்திவிடலாம் நாம் இந்த கட்டுரையில் காளான்களை தாக்கும் பூச்சிகளை பற்றி பார்ப்போம் 


காளான் ஈ 



போரிட் மற்றும் சியாரிட்  என இரு வகையான ஈக்கள் மற்றும் அதன் புழுக்கள் காளான்களை  சேதப்படுத்தும். இதன் தாக்குதலோட அறிகுறி என்றுபார்த்தால் இதன் புழுக்கள் காலன் இலைகளை தின்று திட்டு திட்டாக காணப்படும் மேலும் துர்நாற்றம் அடிக்கும் புழுக்கள் வெண்மை நிறமாக காணப்படும் . சிலசமயங்களில் இந்த ஈக்கள் காளாண்பூசனங்களை எல்லா படுக்கைகளிலும் செல்லும்போது ட்ரைக்கோடெர்மா, பாக்டீரியா, போன்ற நுண்ணுயிரிகளை பரவச்செய்து காளான் விளைச்சளை குன்றச்செய்கிறது . குடிலுக்கு வெளிய உள்ள குப்பைகளில் இனப்பெருக்கம் செய்து நாம் படுகைகளில் இடும் துளைகள் வழியே உள்ளே சென்று 40 முதல் 50 முட்டைகள் வரை இடும் , இவற்றில் இருந்து புழுக்கள் தோன்றும்  


கட்டுப்படுத்தும் முறை 


35 அளவு காஜ் உள்ள கம்பி அல்லது நைலான் ஜன்னலில் ஈக்கள் வராதவாறு பொருத்தவேண்டும் . பெரிய அளவு காளான் உற்பத்தியாக இருந்தாலும் சரி சிறிய அளவு காளான்களை உற்பத்தி செய்தாலும் நீங்கள் முறையான குடில் அமைப்புகளை உருவாக்கினால் ஆரம்ப நிலையிலே பெரிய இழப்புகளை தவிர்க்கலாம்  பாலிதீன் பையில் எண்ணெய் தடவி அறைகளில் கட்டி தொங்க விடலாம் அல்லது விளக்கு பொறி அல்லது இனக்கவர்ச்சி பொறி வைத்து தாய் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம் படுக்கையில் துளையிடும்போது அதில் வேப்ப எண்ணெய் தடவலாம் அல்லது நீங்கள் படுக்கை தயாரிக்கும்போது 200 கிராம் வேப்பம் தூள் கலந்து தயாரித்தால் நல்ல பலன்தரும் 


காளான் சிலந்தி 



நாம் வளர்க்கும் காளான் குடில்களில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத போதும் வெப்ப நிலை 15 C குறைவாக போகும்போது மைட்ஸ் என்பது சிகப்பு சிலந்தி தாக்குவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது 
இதன் தாக்குதல் வளர்ச்சி குறைந்து ஒரு உருவ அமைப்பு வராது . காளான்கள் மீது பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் சிறு சிறு குழிகள் காணப்படும் 


கட்டுப்படுத்தும் முறை 



காளான் அறைகளில் அதிக அளவு நீர் தேங்காமல் தேவையான அளவு மட்டுமே ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும் . விதைப்பை மற்றும் காளான் படுக்கைகள் நேரடியாக தரையில் வைக்காமல் அடுக்குகளில் வைத்து பராமரிக்கலாம் காளான் ஈக்கள் மூலமும் இந்த சிலந்திகள் பரவும் எனவே ஈக்களை முழுமையாக கட்டுப்படுத்தவேண்டும் வேப்பஎண்ணெய் அல்லது லெமன் க்ராஸ் எண்ணெய் உடன் பால் போன்ற ஓட்டும் திரவம் அல்லது டீ அல்லது சோப்பு கரைசலுடன் சேர்ந்து தெளிக்கலாம் 


By

  Smart Vivasayi


Post a Comment

0 Comments