Ad Code

Ticker

6/recent/ticker-posts

விவசாய கடன்களும் மானியங்களும் - 2


குறுகிய கால கடன்

                            குறுகிய கால கடன் இதை பயிர்க்கடன் என்றும் கூறலாம் , இந்த கடன் ஒரு பருவ பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த வகை கடன்களை  கோ-ஆபரேட்டிவ்  வங்கி , கிராம வங்கி மற்றும் வணிக வங்கிகளிடம் பெறலாம். இந்த வகை கடன் வாங்குவதற்கு உங்கள் நில பத்திரத்தை அடமானமாக காண்பிக்க வேண்டும் . இந்த லோன் உங்கள் பயிர் உற்பத்தியை பெருக்கவும் , உங்களுடைய வேளாண் தேவையை பூர்த்தி செய்யவும் , புதிய விவசாய முறைகளை செய்யவும் தரப்படுகிறது . தோட்டக்கலை மற்றும் அது சார்ந்த தொழில்களுக்கும் கொடுக்கப்படுகிறது .

 

         அப்புறம் இந்த லோன் ஒரு பருவத்திற்கு மட்டும் கொடுக்கப்படுகிறது . திரும்ப செலுத்தும் காலம் என்று பார்த்தால் ஒரு வருடம் அல்லது அறுவடை முடிந்த பின்பு செலுத்தலாம் . மேலும் ஒவ்வொரு பருவத்திற்கும் இதே முறையில் கடன் வாங்கலாம் .

 

நடுத்தர மற்றும் நீண்ட கால கடன்கள்


தொழில் முனைவோருக்கு உதவும் ...

 

        இந்த வகை கடன்கள் ஒரு வருடத்திற்கு மேல் உள்ள பயிர்களுக்கு கொடுக்கப்படுகிறது.  குறிப்பாக எதற்க்கு தருகிறார்கள் என்றால் உங்கள் வயலில் போர்வெல் போடுவதற்கு , நிலத்தை சமன் படுத்துவதற்கு, வேலி அமைப்பதற்கு , இயந்திரங்கள் வாங்க  டிராக்டர்ஸ் , அறுவடை இயந்திரம் , அல்லது மற்ற பண்ணை சார்ந்த இயந்திரங்கள் வாங்க , மற்றும் பழத்தோட்டம் அமைக்க அல்லது மேம்படுத்த தரப்படுகிறது .

 

   பயிக்கடனுடன் இதை ஒப்பிடும்போது இதற்கான சட்ட திட்டங்கள்
 வேறுவிதமாக இருக்கும் ஏன் என்றால் கொடுக்கப்படும் கடன் அளவு 

அதிகமா இருக்கும் . நீண்ட காலக்கடன் என்பதால்

வட்டி கம்மியாக இருக்கும். அதே சமயம் சரியான

நேரத்திற்கு வட்டி கட்ட வேண்டும் என்பதையும்

நினைவில் கொள்ள வேண்டும் .


 


இந்த வகை கடன் வாங்குவதற்கான நடைமுறை என்று பார்த்தால் , முதலில்  எந்த கடன் தேவையோ அந்த கடனிற்க்கு  உங்களுடைய விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் . சமர்ப்பித்த பிறகு வங்கி கடன் அதிகாரியோ அல்லது ஆய்வாளரோ உங்களுடைய விண்ணப்பத்தை ஆய்வு செய்து பின்பு உனக்கல நிலத்தை ஆய்வு செய்து எதற்காக கடன் வாங்குகிறீர்கள் என்பதாகி உறுதி செய்வார்கள். மேலும் உங்களிடம் பொருளாதார நம்பகத்தன்மை, கடன் திரும்ப செலுத்தம் நம்பகத்தன்மை, போன்றவற்றையும் உறுதி செய்து உங்களுக்கான கடனை வங்கி  வழங்கும் .


 


இதுவரைக்கும் விவசாயக்கடன்களும் அதன் வகைகள் பற்றி பார்த்தோம் அடுத்து ஒவ்வொரு விவசாய கடன்கள் பற்றிய முழு விவரங்களை பற்றி பார்ப்போம் .


1) விவசாய தங்க நகை கடன்


 இது ஒரு  குறுகிய காலக்கடன் ஆகும் .(12 மாதம் ) மிகவும் எளிதாகவும் சீக்கிரமாகவும் கிடைக்கக்கூடிய கடன் இதுவாகும் அதனாலே அதிக விவசாயிகள் இந்தக்கடனை வாங்குவார்கள் . அதே சமயம் தற்பொழுது அணைத்து வங்கிகளிலும் கிடைப்பதில்லை 2019 டிசம்பர் முதல் விவசாய தங்க நகை கடன் கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டன . ஆனால்  சில வங்கிகளில் வேறு பெயரில் கொடுக்கப்படுகிறது உதாரணமாக  பல்நோக்கு தங்கக் கடன். விவசாய நகை கடன் திட்டம்.

தங்க நகை கடனில் மொத்த தங்கத்திற்கு என்பது சதவீதம் பணம் கொடுக்கப்படுகிறது . அதாவது எட்டு கிராமிற்கு (ஒரு பவுன் ) ஆறு கிராம் அளவிற்க்கு பணம் கொடுக்கப்படும் . அன்றய தேதியில் தங்கம் கிராம் 

என்ன விலை இருக்கிறதோ  அந்த அளவு பணம் தருவார்கள்  அதாவது நூறு ரூபாய் பெறுமானமுள்ள தங்கத்தை அடமானம் வைத்தால் 70 முதல் 80 ரூபாய் கிடைக்கும். ( தயவு செய்து உங்களுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு பணம் மட்டும் கடனாக பெறுங்கள் )

 

  வாங்கிவாரியாக தங்க நகை கடன் பற்றி பார்ப்போம். பொதுவா அணைத்து வங்கிகளிலும் சட்ட திட்டங்களும் ஒன்றாக இருக்கும் ஒரு சில வங்கிகளில் மட்டும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments