Ad Code

Ticker

6/recent/ticker-posts

நான் புதிதாக இருபது நாட்டு கோழி குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறேன் என்ன ரகம் வளர்க்கலாம்

நான் புதிதாகஇருபது நாட்டுகோ ழி குஞ்சுகள் வளர்க்க விரும்புகிறேன் என்ன ரகம் வளர்க்கலாம்



பதில்-1 
சிறுவெடை

பதில்-2
 உங்கள் ஏரியாவில் எது டிமாண்டு.. அத வளர்க்க வேண்டும்.

பதில்-3
கிராமப்பிரியா ங்கற ரகம், முட்டை அதிகப்படியான வரவு.சிறுவிடை மேலும் சூப்பர்

பதில்-4
சிறுவெடை கோழியானது 6மாதம் முதல் 7 மாதத்திற்குல் முட்டை யிட ரடி ஆகும், இது 15To20. முட்டை யிடும், மற்றும் மற்றும் அதிக குஞ்சுகள் பொரிக்கும்,ஆனால் சிறுவெடை பெட்டை கோழி ஆறு மாதம் வரை 800 முதல் 1kg வரை தான் வளரும்,சேவல் 1.300to 1750 kg வரை வளரும் பெருவெடை கோழி 6 மாதத்தில் பெட்டை கோழி 1500 to 2.100kg வரை மற்றும் சேவல் ஆறு மாதங்களுக்கு 1800 முதல் 2,500kg வரை வளரும் பெருவெடை கோழி 10 முதல் 16 முட்டையிடும்,, குஞ்சுகள் பொரிக்கும் திறன் மிக மிக குறைவு ex நான் 16முட்டை வைத்தேன் 5குஞ்சுகள் பொரித்துள்ளது, ஆனால் இந்த பெருவெடை அதிக ௭டை போடும் மற்றும் பெருவெடை அதிக ௭டை போடுவதால் தோராயமாக ஒரு சேவல் முலுமையாக வளரும் பொது அதன் ௭டை 3-3.500kg வரை வளரும் சிறுவெடை சேவல் முலுமையாக வளரும் பொது 1.750kg வளரும்
இதனால் ஒரு சிறிய சேவல் ஆனது சிறிய குடும்பம் ௭ளிதாக வாங்குவார்

பதில்-5


பெருவெடை நல்ல சண்டை ராகத்தில் குஞ்சு வாங்கி விடுங்கள் மாதம் மாதம் 10 குஞ்சுகள் வாங்கி விடுங்கள் பின்பு எட்டு அல்லது ஒன்பது மாதத்தில் விற்பனை செய்யலாம் ஒரு சேவலின் விலை குறைந்தது 2000 முதல் மூன்றாயிரம் நான்காயிரம் வரை விற்பனை செய்யலாம் அது சேவல்சண்டை பொருத்து பின்பு நீங்கள் மாதம் மாதம் வாங்கிவிட்ட குஞ்சுகளை அடுத்தடுத்து விற்பனை செய்யலாம் இதனால் உங்களுக்கு லாபம் மாதம் 20000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கிடைக்கும்

Post a Comment

0 Comments