Ad Code

Ticker

6/recent/ticker-posts

மண் கரைசல் மூலம் கூடுதல் மகசூல்



ரசாயனம் உரம் பயன்படுத்தாமல், மண் கரைசல் மூலம் மகசூல் கூட்டும் முறை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, கூடப்பாக்கம் வேளாண் விஞ்ஞானி வெங்கடபதி மகளும், எல்.என்.டி.சி இணை நிறுவனருமான இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆந்திரா விவசாயி ஒருவர் ரசாயன உரம் பயன்படுத்தாமல், மண் மூலம் மகசூல் கூட்டும் முறையை கண்டுப்பிடித்துள்ளார். இதனை ஒய்.எஸ்.ஆர் பல்கலைக்கழகம் உறுதி செய்து, காப்புரிமை பெற்றுக்கொடுத்துள்ளது. நிலத்தின் மேல் மண் 15 கிலோ, 4 அடிக்கு கீழ் அடுக்கு மண் 15 கிலோ என இரண்டையும் சேர்த்து நிழலில் உலர்த்த வேண்டும். 15 தினங்களுக்கு பின், 200 லிட்டர் பேரல் தண்ணீரில் கலக்க வேண்டும்.

அந்த தண்ணீரை பி.பி.டி நெல் ரகத்திற்கு இலை வழி தெளிப்பு மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளித்து வர ஒரு ஹெக்டேரில் 4300 கிலோ மகசூல் கிடைத்தது  5 சாகுபடியிலும் ஒரே அளவான மகசூல் கிடைத்தது நெல், கோதுமை, சோளம், திராட்சை சாகுபடியில் பூச்சி, பூஞ்சனம், நோய் தாக்குதல் அறவே இல்லை.

இந்த கரைசலில், கண்ணுக்கு புலப்படாத மண் துகள்கள் இலை மேல் ஒட்டி கொள்கிறது. பூச்சிகள் இலையை உண்ணும்போது வயிற்றில் மண் ஜீரணம் ஆகாமல் அழிகின்றன. சாறு உறுஞ்சும் மாவு பூச்சிகளின் மேல் மண் துகள்கள் படுவதால் சுவாச உறுப்புகளில் மண் துகள்கள் சென்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறக்கின்றன, நோய் கிருமிகள் மீது படும்போது ஒவ்வாமை ஏற்படுகின்றன.

இந்த தொழில் நுட்பத்திற்கு மத்திய அரசு காப்புரிமை கொடுத்துள்ளது. கொய்யா செடிகள் மீது தெளித்தபோது நல்ல பலன் கிடைத்தது. இக்கலவையில் வைட்டமின் ‘எ” மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் செடிகள் நன்கு வளர்ந்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments