Ad Code

Ticker

6/recent/ticker-posts

சத்துள்ள பால் பெற மாடுகளுக்கு அளிக்க வேண்டியfeeds







🐃 பொதுவாக பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். 

🐃 இவற்றை தவிர கொழுப்பின் அளவைக்கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது.

🐃 பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்பும், 8.5 சதவீத கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை சில வழிகளில் அதிகரிக்கலாம்.

கொழுப்பற்ற திடப்பொருளை அதிகரிக்க வழிகள் :

🌿 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுப்பது மற்றும் கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவை அதிகரிக்கும் நிலையில் பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

🌿 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.




கொழுப்புச்சத்து :

🍃 சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்புச்சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. 

🍃 எரிசக்தி தீவனம் அளித்தல் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

எரிசக்தி தீவனம் :

🍃 பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்புச்சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்புச்சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும். 

🍃 பாலில் கொழுப்பு அளவும் குறைவாக இருக்கும். இதுபோன்ற பாதிப்பை தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

🍃 மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். 

🍃 கலப்பு தீவனத்தில் 33 சதவீத புண்ணாக்கு, 30 சதவீத தவிடு, 1 சதவீத தாது உப்பு என்ற அளவில் கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கும் 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

நார்ச்சத்து :

🍂 மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். பாலில் கொழுப்பின் அளவை அதிகரிக்க ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

🍂 இதுதவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். 

🍂 ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். 

🍂 இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும்போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும்.


*கறவை மாடுகள் மற்றும் எருமைகள் வளர்ப்பில் சில முக்கிய ஆலோசனைகள்*:
கால்நடைகளை நல்ல காற்றோட்டமுள்ள கொட்டகைகளில் அல்லது மர நிழல்களில் நிறுத்த வேண்டும்.

• வெப்ப தாக்கத்தை குறைக்க கால்நடைகளை முன் பகல் மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.

• வெப்ப தாக்கத்தை குறைக்க எப்பொழுதும் குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும்.

• கறவை மாடுகள் மற்றும் எருமைகளுக்கு காலை 11 மணி மற்றும் மதியம் 3 மணிக்கு குளிர்ந்த நீரை தெளிக்க வேண்டும்.

• அவ்வப்பொழுது கால்நடைகளுக்கு வெப்ப தாக்கம் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.
• கால்நடைகளுக்கு தீவன திடல் அமைக்க வேண்டும்.

 (10 சென்ட் மாதிரி தீவன திடல் - 4 செனட் CO 4, 3 சென்ட் - தீவன சோளம் (CO FS 29), 3 சென்ட் வேலிமசால்) ஓரங்களில் மரவகை தீவனமான அகத்தி, சூபாபுல்லை நடவு செய்யலாம்.

• பால் விலை 3-5 ரூபாய் லிட்டருக்கு குறைந்துள்ளதால் பால் பண்ணையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். பால் உற்பத்தியில் 60-70% தீவனசெலவு எடுத்துக்கொள்வதால் பண்ணையாளர்கள் தாங்கள் அருகில் கிடைக்கும் மரபுசாரா தீவனத்தை அளிக்களாம்.

• யூரியா, கரும்பு ஆலை கழிவு (Pressmud) மற்றும் உப்பு பயன்படுத்தி வைக்கோலை செரியூட்டி கொடுப்பதால் கால்நடைகளுக்கு செரிமானம் அதிகரித்து உற்பத்தி பெருகும்.

• மண்ணில்லா (ஹைட்ரோ போனிக்ஸ்) விவசாய முறையில் விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும்.

• மழை காலத்திற்கு முன்பு கால்நடைகளுக்கு குடற்புழு தொற்று ஏற்படும் என்பதால், கால்நடைகளின் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக் கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து கொள்ளவும்.

• புற ஒட்டுண்ணியை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி நீக்க மருந்தை பயன்படுத்தவும்.

• 3-6 மாத வயது உடைய கன்றுகளுக்கு தாது உப்பு கட்டிகளை கொட்டகைகளில் கட்டி தொங்கவிடுவதால், தாதுப்பு குறைப்பாட்டை கட்டுப்படுத்தலாம்.

• பால் மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 30 கிராம் தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும்.

• வற்ற கறவை
 மாடுகளுக்கு தானுவாஸ் தாதுப்பு 15 கிராம்; தினமும் தீவனத்தில் அளிக்க வேண்டும்.

• தினமும் தீவனத்துடன் (NaCl) சாதாரண உப்பு 30 – 50 கிராம் அளிப்பதால் பால் அளவு அதிகரிக்கும்.

• பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்க மற்றும் மித அமில நோய் கட்டுப்படுத்த தினமும் தீவனத்தில் 30 -50 கிராம் சமையல் சோடா உப்பை கலந்துவிட வேண்டும்.

• நாள் ஒன்றுக்கு அசோலா 1-2 கிலோ வீதம் கறவை மாடுகளுக்கு அளிக்கலாம்.

• பீர் பூசா கழிவுகளை தினமும் 10 சதம் வரை மாடுகளுக்கு கொடுக்கலாம்.

• தானுவாஸ் மாஸ்டி காட் தெளிப்பானை பயன்படுத்தி மடி நோய் வராமல் பாதுகாக்கலாம்.

• விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்துவ முறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments