Ad Code

Ticker

6/recent/ticker-posts

நெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் முறை

தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் விதை பயிரிடப்படுகிறது. இந்த முறையில் மகசூல் அதிகரிப்பதோடு, நீரின் தேவையும் குறைவாக உள்ளது பல புதிய நெல் ரகங்கள் அறிமுகமாகியுள்ள போதும் நாற்று நட்டு பயிரிடும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது இந்த முறையிலிருந்து சற்றே வித்தியாசமான முறையில் நெல் சாகுபடி செய்து அதாவது நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின் கேப்சூல்களில் இட்டு அதாவது கேப்சூல்களுக்குள் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்படுகின்றன. ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும்


     கேப்சூல் விதைகளை, விவசாயத்திற்காக அணைகளில் தண்ணீர் திறக்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பே புழுதி உழவு முறையில் மண்ணில் ஊன்றி விடலாம். தண்ணீர் திறக்கப்பட்டவுடனோ, அல்லது மழை பெய்தாலோ, கிணற்றுப்பாசனம் மூலமோ, ஈரப்பதம் கேப்சுளை நனைத்த 7 முதல் 15 நாட்களில் ஜெலட்டின் கரைந்து நெல்மணிகள் முளைக்க துவங்கி விடும். 25ம் நாட்களில் எல்லாம் வேர் பிடித்து முதல் களை எடுக்க துவங்கி விடலாம்.



  பூச்சி நோய் மேலாண்மை பொறுத்தவரை  இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி மற்றும் நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை

    கேப்சூல் முறையில் பயிர் செய்யும்போது 90 நாட்களில் இருந்து 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம் மேலும், "நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல் முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும்.

    "இந்த கேப்சூல் முறை சாகுபடியை எள், கத்தரி, தக்காளி, போன்ற சிறிய விதைகளுக்கு கூட பயன்படுத்தலாம்."கேப்சூல் விதைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 60 முதல் 80 தூர்வரை வரும். அவை அனைத்திலுமே கதிர் வைக்கும், நோய்த்தாக்குதலும் அதிகம் இருக்காது.

குறைந்த அளவு தண்ணீர், முதலீடு; ஆனால் மகசூலோ அதிகம். நெல் மட்டுமல்லாமல் அனைத்து சிறிய ரக விதைகளுக்கும் இந்த முறை பயன்படுத்தலாம்.

"கேப்சூல்களால் மண் வளம் பாதிக்கப்படாது. செடிகளுக்கு இயற்கை முறையில் சத்துகளை கேப்சூலுக்கு வைத்து நடுவதால் மண் வளம் அதிகரிப்பதோடு செடி வளர்ச்சி நன்றாக இருக்கும்."


நன்றி பிபிசி

மேலும் இது பற்றி முழுமையாக

 தெரிந்து கொள்ள

https://www.bbc.com/tamil/india-44667472



Post a Comment

0 Comments