Ad Code

Ticker

6/recent/ticker-posts

வீரிய நெல் நாற்று உற்பத்தி - சில யுக்திகள்




நாற்றுக்களின் பராமரிப்பை பொறுத்தே, பயிர் மகசூல் அமைகிறது. அதற்கு வீரியம் மிகுந்த நெல் நாற்றுகளை உற்பத்தி செய்வது மிகவும் இன்றியமையாதது. வளமான நாற்றுக்களை உற்பத்தி செய்வதற்கு பின்வரும் யுக்திகளைப் பயன்படுத்துவது நல்லது. வளமான நாற்றுக்களைப் பெற தரமான நெல் விதையைப் பயன்படுத்த வேண்டும்.

ஒரு வருடத்திற்கு மேல் சேமிக்கப்பட்ட விதைகளை உபயோகிக்கக் கூடாது.
தேர்வு செய்த இரகத்தின் விதைகள் சான்றிதழ் பெற்றதாகவும் அதிக முளைப்புத் திறன் கொண்டதாகவும் இருப்பது அவசியமாகும்.

*விவசாயத்துக்கு மட்டும்*

*தரம் உயர்த்துதல்  (Quality develop)*

உப்பு நீர்க் கரைசலைப் பயன்படுத்தி தரமான விதைகளைப் பிரித்தெடுப்பது, வீரியமான நாற்றுக்களைப் பெற இயலும்.

*ஈர விதை நேர்த்தி (Seed)*

கார்பன்டசிம் (அ) டிரைகோசோல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொண்டு 1 கிலோ விதைக்கு 1 லிட்டர் தண்ணீர் என்ற வீதத்தில் விதைகளை 16-18 மணி நேரம் ஊறவைத்து முளைகட்டி பின்பு விதைக்கலாம்.

*நாற்றங்கால்***

ஒரு ஏக்கர் நடவுக்கு 8 சென்ட் நிலத்தை தேர்வு செய்து அடியுரமாக 400 கிலோ மக்கிய தொழு உரம் இட்டு நன்றாகக் கலக்க வேண்டும். சேற்றுழவு செய்த பிறகு ஒரு சென்ட் அளவில் சமன் செய்யப்பட்ட மேட்டுப் பாத்திகள் அமைத்து பாத்திகளை சுற்றிலும் 30 செ.மீ. அகலமுள்ள சிறுவடிகால் அமைக்க வேண்டும்.

*விதைப்பு  (Sowing)*

மேட்டுப் பாத்தி நாற்றங்காலில் சிறதளவு நீரைத் தேக்கி பின்பு முளை கட்டிய விதைகளை விதைக்க வேண்டும். குறுகிய கால இரகமாக இருந்தால் சென்டிற்கு 4 கிலோ விதையும், மத்திய கால இரகமாக இருந்தால் சென்டிற்கு 3 கிலோ விதையும் வீரிய ஒட்டு நெல்லாக இருந்தால் சென்டிற்கு 1 கிலோ விதை என்ற அளவில் விதைப்பு செய்ய வேண்டும்.

*நீர் நிர்வாகம்  (Water Management)*

விதைத்த 18 – 24 மணி நேரத்தில் சிறிதும் நீர் தேங்காமல் வடித்து விடவேண்டும். ஆனால் ஈரம் காயாமல் இருப்பதும் அவசியம். விதைத்த ஐந்தாம் நாளிலிருந்து நீரின் அளவைக் கூட்டி நாற்றின் வளர்ச்சிக்குத் தக்கவாறு அதாவது 1.5 – 2.5 செ.மீ. உயரத்திற்கு நீர் கட்ட வேண்டும்.

*உரம் தெளித்தல் (Fertilizers)*

நாற்றுக்களின் வளர்ச்சிக் குன்றி, மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் யூரியாக் கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் என்ற அளவில் கலந்து இலைவழி மூலமாக கலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தெளிக்க வேண்டும்.

விவசாயத்தில் உழவனின் உழைப்பு அளப்பரியது. இரவு பகல் பாராது அயராது உழைத்து, பயிர்களை காத்து, தரமான முறையில் நஞ்சில்லா உணவை (Non-Toxic) உற்பத்தி செய்து வருகிறார்கள் விவசாயிகள். அவர்களின் கடின உழைப்பால் விளைந்த நெல் மணிகளை பாதுகாப்பாக சேமிக்க பல்வேறு வழிமுறைகள் இருப்பினும், சிறப்பான சில வழிமுறைகளை இங்கு காண்போம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் இயற்கை சீற்றங்களால் ( தென்மேற்கு பருவமழை ,வடகிழக்கு பருவமழை , பருவம் தவறிய மழை ) நெல் , கோதுமை , மற்றும் சிறு தானியங்கள் டன் கணக்கில் மழையில் சேதமடைகிறது .மேலும் அரசின் நேரடிக் நெல்  கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு காரணமாகவும் நெல் சேதமடைகிறது. 

 அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பயன் கிடைக்கவில்லை .இதனால் விவசாயிகளுக்கு வருடந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. 

*வீணாகும் நெல் மணிகள்*

விவசாயிகளால் கடினமான முறையில் உழைத்து உற்பத்தி செய்யப்பட்ட உணவுதானியங்களை மிக எளிதில் பூச்சிகளும், எலிகளும் (Rat) தின்று சேதப்படுத்தி விடுகின்றன. இவை சேதப்படுத்துவது தானியங்களை மட்டும் அல்ல அரும்பாடு பட்டு உழைத்த உழவர்களின் உழைப்பையும் நேரத்தையும் தான்.

அறுவடைக்கு பின்னர் போதிய பாதுகாப்பில்லாமல் சேமித்து வைக்கப்படும் உணவு தானியங்களைத் தான் இந்த உயிரினங்கள் குறிவைத்து சேதப்படுத்துகின்றன. எனவே, களத்திலிருந்து அறுவடை (Harvest) செய்த தானியங்களை தகுந்த முறையில் சிறப்பான வழிகளில் பாதுகாப்பாக சேமிக்க வேண்டியது நம் தலையாயக் கடமை.

விதை விதைக்கும் போது நாம் செயல்படுவதை விட, விளைந்த நெல் மணிகளை (Paddy) பாதுகாக்கும் முயற்சியில் நாம் அதிக கவனத்தோடு செயல்பட வேண்டும். பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைத்து விவசாயிகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். அப்போது தான் உழைப்பின் பலனை முழுவதுமாய்க் காண இயலும்.

*அறுவடை செய்யும் நேரம்*

நெல்மணிகள் அதிக அளவில் கிடைக்க நெல் அறுவடையை உரியநேரத்தில் செய்ய வேண்டியது அவசியம். நெல் தானியத்தை பொறுத்தமட்டில் நெல் மணியானது 80 சதவீதம் மஞ்சள் நிறமாக (Yellow) இருக்கும் போது அறுவடை செய்யலாம். அப்போது ஈரப்பதம் 19.23 சதவிகிதம் என்ற அளவில் இருக்க வேண்டும். நெல்மணிகளை அதிக சூரிய வெப்பத்தில் (Sun Light) காய வைக்காமல் மிதமான சூரிய வெப்பத்தில் காய வைக்க வேண்டும். காய வைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

*பாதுகாக்கும்

 
வழிமுறைகள்"

அதிக ஈரத்துடன் காணப்படும் நெல்லை சேமிக்க கூடாது. சரியான நிலையில் இருக்கும் நெல்லை கோணிப்பையில் நிரப்பி, தரை மீது மரச்சட்டங்களை (Wooden frame) அல்லது காய்ந்த வைக்கோல் (Straw) பரப்பி, நெல் மூட்டைகளை அடுக்க வேண்டும்.

அதே போல் சுவரிலிருந்து ஓரடி இடைவெளி விட்டு அடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீரில் 10 மிலி மாலத்தியான் (Malathiyan) மருந்தைக்கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளித்தால், அந்துப்பூச்சி தாக்காமல் இருக்கும்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் உள்ள வணிக முறை தரம்பிரிப்பு மையங்களில் நான்கு ரகங்களாக பிரிக்கப்படுகிறது. விவசாயிகள் நெல்லின் தரத்தையும், ஈரப்பதத்தையும் அங்கு தெரிந்து கொள்ள முடியும்.

*வீணாகும் நெல்மணிகளின் அளவு:*

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களில் பூச்சிகளால் 2.55 சதவீதமும், எலிகளால் 2.5 சதவீதமும், பறவைகளால் 0.85 சதவீதம், ஈரப்பதத்தால் 0.68 சதவீதம், கதிரடிக்கும் இயந்திரங்களால் 1.68 சதவீதம், போக்குவரத்தின் போது 0.15 சதவீதமும் இழப்பு ஏற்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது. இனியாவது விவசாயிகளின் கடின உழைப்பால் விளையும் நெல் மணிகளை தகுந்த முறையில் பாதுகாத்து விவசாயம் காப்போம்.

*பருவம் தவறிய மழை 2*



பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து வளி மண்டலத்தில் மாசு நிறையும். இதனால் மழைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நெற் பயிரைத் தாக்கும் நோய்கள் இப்போது கோடைக்காலத்திலும் தாக்குகின்றன.

*பயிர்களைத் தாக்கும் நோய்களை தடுக்கும் முறைகள்*

மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும்போது நோய் அதிகம் வரும்.
கண்ணுக்குப் புலப்படாத நுண் கிருமியான ஒருவிதமான பாக்டீரியாவால் இப்போது நோய்கள் உருவாகி வருகின்றன.

*விவசாயத்துக்கு மட்டும்*

பொதுவாக இந்த பாக்டீரியா கிருமிகள் உஷ்ணம் அதிகமாக இருக்கும்போது அழிந்து விடும்.
குலை நோய்

பொதுவாக இந்த நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐ.ஆர். 50 நெல் ரகங்களில் அதிகமாக வரும்.

*குலை நோய் வருவதற்கான காரணம்*

காற்றில் அதிகமான ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள பயிர்களின் வேர்களால் சரியாக சுவாகிக்க முடியாமல் இருப்பதால் இந்த நோய் வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த வயல், வரப்புகளில் உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
தழைச்சத்து உரம் அதிகமாக இடக்கூடாது.

அப்படி தழைச்சத்து உரம் அதிகமாகப் போடுவதாக இருந்தால் அதை 3 பிரிவாகப் பிரித்து இட வேண்டும். அதாவது 50 சதவீதம் பயிர் நடவு செய்யும் போதும் 25 சதவீதம் தூர் கட்டும் போதும், மற்றொரு 25 சதவீதம் தண்டு உருளும்போதும் இட வேண்டும்.

தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரன்ஸ் என்ற உயிரி ரக மருந்தை 1 கிலோ எடுத்து 500 லிட்டர் நீரில் கரைத்து நடவு நட்ட 45-வது நாளில் இருந்து 10 நாள் இடைவெளியில் 3 முறை பயிரின் மீது தெளிக்க வேண்டும்.

தாக்குதல் மிகவும் அதிகமாக இருந்தால் கார்பன்டசீல் 1 ஹெக்டேருக்கு 250 கிராம் அல்லது டிரைசெக்லோஸைல் 250 கிராம் தெளிக்க வேண்டும்.

*பாக்டீரியல் இலை கருகல் நோய்*

இந்த நோய் இப்போது ஆடுதுறை 37 நெல் ரகத்தில் அதிகம் தென்படுகிறது.
இது முக்கியமாக கோடைப்பருவத்தில் பய்டோபிளாஸ்மா, ஆர்என்ஏ வைரஸ் மூலம் வருகிறது.

*நிர்வகிக்கும் முறைகள்*:

ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது.
20 கிலோ பசும் சாணத்தை 100 லிட்டர் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து அதன் நீரை இலைகள் மீது தெளிப்பதால் இதைக் கட்டுப்படுத்தலாம்.

பிளிச்சிங் பவுடர் 100 மைக்ரோ கிராம் 1 மி.லி. தண்ணீரில் கரைத்து பயிரில் தெளிக்க வேண்டும்.
தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர் ஹைட்ராக்ஸைடு 2000 ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

*இலைக் கருகல் நோய்*

நெல்லில் தண்ணீர் அதிகமாகக் கட்டும்போது இலை கருகிவிடுகிறது.
இதைச் சரி செய்ய தழைச் சத்து அதிகம் இடுவதைத் தவிர்த்து சாம்பல் சத்து அதிகம் இட வேண்டும்.

2 சதவீதம் கால்சியம் சல்பேட் அல்லது 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரஸல் என்ற உயிரி ரக மருந்தை இலையின் மீது தெளிக்க வேண்டும்.

அதிமாகத் தென்பட்டால் கார்பன்டஸீம் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் அல்லது கான்டாப் 1 லிட்டர் 2 மி.மீ. அல்லது டெனோமைல் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. பாலிஆக்ஸின் 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஹைட்ரைக்சைடு101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் எதாவது ஒன்றை கரைத்துத் தெளிக்க வேண்டும்.

*இலை உறை அழுகல்நோய்*

டிகேஎம் 9, என்ற நெல் ரகத்தில் பரவலாகத் தென்படுகிறது.
இதைக் கட்டுப்படுத்த வடிகால் வசதி அவசியம்.

நெல் பயிரில் தேங்கியுள்ள நீரை வடிகட்ட வேண்டும்.

தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர்ஹைராக்சைடு 101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம், அல்லது பென்டின் ஹைட்ராக்சைடு 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து இலை உறை மீது தெளிக்க வேண்டும்.

தாக்குதல் மிகவும் தென்பட்டால் புராபிகோனாஸைல் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் எடுத்து தண்டுப் பகுதியில் சுற்றியுள்ள இலை உறை மீது தெளித்து நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.

இது போன்ற ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

கேள்வி பதில்கள்

1. வானிலையால் நெல் மகசூல் பாதிக்கப்படுமா?

வெப்பநிலை, சூரிய ஒளிக்கதிர் மற்றும் மழைப்பொழிவு ஆகியவை பயிர் வினையியல் செயல்களான தானிய உற்பத்தியை நேரடியாக தாக்கியும், நோய்கள் மற்றும் பூச்சிகளின் மூலமாக மறைமுகமாக தாக்கியும் நெல் மகசூலில் செயல் விளைவை ஏற்படுத்துகின்றது.

2. வானிலை மாற்றத்தால் நெல் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகள் யாவை?

வெப்பத்தால் நெல் மலட்டுத்தன்மை ஏற்படுவதுடன் அதன் மகசூல் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகமாக குறைதல். மேலும், குறைந்த வெப்பநிலை காரணமாக, நெல் வளர்ச்சிக்கால அளவு அதிகமாகிறது..

3. நெற்பயிரின் முதிர்ச்சிப் பருவத்தில் குறைந்த வெப்ப நிலையால் உண்டாகும் விளைவுகள் என்ன?

பூங்கொத்திலிருந்து தானியமணிகள் எளிதாக உதிர்ந்துவிடும். பயிரின் முதிர்ச்சி நிலையில் வெப்ப நிலை மிகவும் குறைவாக இருந்தால் தானிய உறக்க நிலை குறைவாக இருக்கும். நெற்பயிர், தானியங்களைவிட வைக்கோலையே அதிகம் உற்பத்தி ச




4. நெற்பயிரின் முதிர்ச்சிப்பருவத்தில், அதிக வெப்பநிலை ஏற்படுவதால் உண்டாகும் விளைவுகள் என்ன?

அதிக வெப்பநிலையால், விரைவான தானிய முதிர்ச்சி ஏற்படுகிறது. இதனால், தானியம் முதிரா நிலை (பிஞ்சு நிலை) ஏற்படுகிறது. இந்நிலையில் பகுதி நெல் சுண்ணாம்பு போன்று பால் வெள்ளை நிற மேலோடுகளுடன் தவிடு நன்கு தடித்தும் கெட்டியாகக் காணப்படும்.


Post a Comment

0 Comments