Ad Code

Ticker

6/recent/ticker-posts

பொன்னீம்






பொன்னீம் மிகச்சுலபமாக தற்சார்பாக பூச்சிகளை விரட்ட நாமே எளிமையாக தயாரித்து கொள்ளலாம்.

நெற்பயிரில் இலைகளில் தோன்றும் மஞ்சள் தன்மை, நுனிகருகல் மற்றும் வேர்தண்டில் உள்ள பூச்சிகளால் கிளைப்புகள் குறைந்து காணப்படுவது போன்ற பிரச்சனகளை பொன்னீம் எளிதில் களையும்

 *ஒரு லிட்டர் பொன்னீம்* *தயாரிக்க* 
 *தேவைப்படும் பொருட்கள்.* 
வேப்பெண்ணெய் -- 450 மில்லி
புங்கன் எண்ணெய் -- 450 மில்லி.
காதிசோப்பு கரைசல் --.100மில்லி.

இம்மூன்றையும் நன்கு கலந்தால், அக்கலவையே பொன்னீம் ஆகும்.

 *பயன்கள் :* 
வேரழுகல், குறுத்தழுகல், பூஞ்சான நோய்கள் , சாறு உறிஞ்சும் பூச்சிகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும்.

நெல், காய்கறி, கீரை போன்ற அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

 *அளவுகள் :* 
10 லிட்டர் தண்ணீருக்கு 50 லிருந்து 100 மில்லி வரை பொன்னீம் பயன்படுத்தலாம்.

கீரைகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 30 லிருந்து 50 மில்லி வரை பயன்படுத்தலாம்.

Post a Comment

0 Comments