Skip to main content

நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் அமைக்கும் முறை







நாற்றங்கால் படுக்கைகளை மேடான இடத்தில் அமைக்க வேண்டும். விளக்குக் கம்பங்களுக்கு அருகாமையில் நாற்றங்கால் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஒரு சதுர மீட்டர் நாற்றங்கால் பரப்பளவில் உள்ள படுக்கைகளை 50 கிராம் பாக்டீரியா உயிர்ரக கொல்லியான சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ், 200 கிராம் வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு ஆகியவற்றுடன் கலந்து பின் நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும்

ிறமையான நாற்றங்காலை உருவாக்கு-வதில்தான் விளைச்சலின் சூட்சமமே அடங்கியிருக்கிறது. ஒரு ஏக்கர் நடவுக்கு, ஒரு சென்ட் நிலம் போதுமானது. நடவு நிலத்துக்கு அருகிலேயே நாற்றங்கால் அமைப்பது நல்லது. நாற்றங்கால் நிலத்தை நன்றாக உழுது, தண்ணீர் பாய்ச்சி, சேறாக்கி, நிலத்தைச் சமப்படுத்திக் கொள்ள வேண்டும். நாற்றங்காலை சுற்றிலும் கரைகளை அமைத்து, மூன்று அடி அகலம், அறுபது அடி நீளம் கொண்ட இரண்டு மேட்டுப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளின் மீது நன்றாக மக்கிய தொழுவுரத்தைத் தூளாக்கி அரை அங்குல உயரத்துக்குத் தூவிவிட வேண்டும். அதன்மீது  அளவுக்கு அசோஸ்பைரில்லம் ஒரு கிலோ தூவவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. விதையுடன் இருபது கிராம் சூடோமோனஸ் உயிர் உரத்தை கலந்து, சாக்கில் கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் மூட்டைகளை ஈரத்தோடு அடுக்கி வைத்து விடவேண்டும். 12 மணி நேரம் கழித்து விதைகள் முளைக்கத் துவங்கிவிடும். இப்படி முளைகட்டிய விதைகளை கைகளால் அள்ளி, பாத்தியில் பரவலாக விதைக்க வேண்டும். விதைகள் வெளியே தெரியாதபடி தொழுவுரத்தை பொடி செய்து தூவவேண்டும். இதன் மீது வைக்கோலை மூடாக்காகப் பரப்பி உயிர்த் தண்ணீர் தெளிக்க வேண்டும். இரண்டு நாளைக்கு காலை, மாலை இருவேளையும் நாற்றங்காலில் ஈரப்பதம் இருக்கும் அளவுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். மழைக்காலமாக இருந்தால் ஒருவேளை தெளித்தால் போதும். இரண்டு நாள் கழித்து வைக்கோல் மூடாக்கை எடுத்துவிட வேண்டும். முளைத்த நாற்று இரண்டு அங்குலம் அளவுக்கு இரும்பு ஆணியைப் போல் திடமான நாற்றாக வளர்ந்து விடும்.

நாற்றுக்கு வயது 15 நாள்!

Comments

  1. Opt in to the promotion, add any free spins bonus 바카라사이트 code India gamers may need, and fulfil any minimal first deposit requirements utilizing accepted payment methods. The commonest quantities of free spins to receive from a web-based on line casino bonus is either 10 spins, 20 spins or 30 spins. These low quantities might not look like much on the surface, however they often mean that there shall be low wagering situations connected. You’ll also often see 50 free spins up for grabs, though these often require deposits and have caps on the winnings. We have an enormous collection of video games for our members to take pleasure in.

    ReplyDelete

Post a Comment

Smart vivasayi

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...