Skip to main content

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு - Incubating Poultry care

Incubating Poultry care





  



நாட்டுக்கோழிகள் பொதுவாக 10 முட்டைகள் முதல் 20 முட்டைகள் வரை இடும். அந்த நாட்டுக்கோழிகள் அடைக்காக்கும் பொழுதும், குஞ்சு பொரிக்கும் பொழுதும் பராமரிக்க வேண்டிய செயல்முறைகள் பற்றி பார்ப்போம்.

அடைக்காக்கும் கோழி பராமரிப்பு 

1.சித்திரை மாதம் மற்றும் மார்கழி மாதத்தில் அடை வைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிரால் முகத்தில் அம்மை நோய் தாக்கி சிறு குஞ்சுகள் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.



2.நாட்டுக்கோழிகள் பிறந்த 150 நாட்களில் முட்டை இட ஆரம்பிக்கும். முதன்முதலாக அடைக்காக்கும் கோழிகளை தவிர்த்து 2 அல்லது 3-வது முறையாக அடைக்கு வரும் கோழிகளை பயன்படுத்தலாம். ஏனெனில் முதல்முறையாக அடைக்காக்கும் போது பல கோழிகளுக்கு முட்டைகள் மீது சரியாக உட்கார தெரியாது.


3.ஒரு அடைக்கு 12 முட்டைகளுக்கு மேல் வைக்கக்கூடாது. ஏனெனில் வெப்பம் சீராக இல்லாமல் குஞ்சு பொரிக்கும் திறன் குறைய வாய்ப்பு அதிகம் உண்டு.

4.அடை வைக்கும் முட்டைகளை காய்ந்த வைக்கோல் அல்லது உமி போன்றவற்றின் மீது வைப்பதை விட, இலேசான ஈர மணல் மீது வைப்பதால் பொரிக்கும் தன்மை அதிகரித்து, பேன் போன்ற ஒட்டுண்ணிகள் தாக்காமல் இருக்கும்.
5.அடையில் உட்காரும் கோழி தான் விரும்பிய பொழுது எழுந்து வெளியில் சென்று வருமாறு இருக்க வேண்டும். மூடி வைக்கும் நிலையில் இருக்குமானால், அதை 1 நாட்களுக்கு ஒரு முறை திறந்துவிட வேண்டும்.



6.அடையில் இருந்து வெளியே வந்த கோழிகள் உடனடியாக குடிக்கும் வகையில் தண்ணீரை தயாராக ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
7.காய்ந்த மிளகாய்கள் இரண்டினை முட்டைகள் அருகில் வைப்பதன் மூலம் ஒட்டுண்ணிகள் கோழிகளை தாக்காது.
8.21-வது நாள் குஞ்சுகள் அனைத்தும் பொரித்து விடும். 21 நாட்களில் முட்டைகள் அனைத்தும் பொரிக்கவில்லை எனில், அதே கோழியை மறுபடியும் வேறு முட்டைகள் மீது உட்கார வைக்ககூடாது.
9.ஏனெனில் அடைக்காக்கும் கோழிகள் சரியாக உண்ணாது. எனவே தொடர்ந்து முட்டைகள் மீது உட்கார வைப்பதால் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு கோழி இறக்க வாய்ப்பு உள்ளது.
10.கோழிகள் அடையில் இருக்கும் போது பெரும்பாலும் நோய்கள் அவற்றை தாக்காது. ஏனெனில் எந்த நோய்களும் முதலில் வலுவான கோழிகளை மட்டுமே தாக்கும்.

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...