Ad Code

Ticker

6/recent/ticker-posts

வேளாண்மையில் உள்ள திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோமா

Let us know about the Schemes in agriculture


இந்தியா பெருமளவு அதன் பொருளாதாரத்திற்கு விவசாயத்தையே நம்பி இருக்கிறது.  கடந்த ஆண்டு உணவுதானியன்கள் உற்பத்தி மட்டும் 275 மில்லியனும் தோட்டக்கலை உற்பத்தி 300 மில்லியனையும் தாண்டியது . கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 99 வாட்டர் ப்ராஜெக்ட் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. பருப்பு வகைகள் மற்றும் என்னை வித்துக்களின் உற்பத்தி 38 சதவீதம் அதிகரித்துள்ளது . பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்புகாக 11000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது . இயற்கை மற்றும் அங்கக விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது . கடந்த பத்தாண்டுகளில் விவசாயம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 11.7 சதவீதத்திலிருந்து 13.9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது . சோலார் பம்ப் திட்டம் PMKUSAM இருப்பது லச்சம் விவசாயிகளை சென்றடைந்திருகிறது . விவசாயிகளுக்கென கிசான் ரயில் திட்டம் , 2025 க்குள் பால் உற்பத்தியை இரண்டுமடங்காகுவது , பயிர் சேதத்தை தடுக்கும் திட்டம் என பல திட்டங்கள் இந்தியாவில் உள்ளன அவற்றை பற்றி தெரிந்து கொள்வது அவசியம் 

PM KISAN MAAN DHAN YOJANA 



விவசாயிகளுக்கு பென்ஷன் தருவதற்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் ஒவ்வொரு விவசாயிக்கும் 60 வயதிற்கு மேல் மாதம் 3000 கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்ட திட்டமாகும். இதுவரை 18 லச்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர் . போன நிதியாண்டில் மட்டும் அரசாங்கம் இத்திட்டத்திற்க்காக 900 கோடி வரை நிதி ஒதுங்கியுள்ளது .

PRDHAN MANTRI KISAN SAMMAN NIDHI 



2 ஹெக்ட்ர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு குறு விவசாயிங்களுக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் . இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ ,2000 வீதம் மூன்று தவணைகளில் நான்கு மாதத்திற்கு ஒரு முறையென மொத்தம் 6000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது . இதுவரை இந்த திட்டத்தினால் 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடைந்துள்ளன . தற்பொழுது இத்திட்டம் அணைத்து விவசாயிகளும் சேரலாம் 

IRRIGATION UNDER PRADHAN MANTRI KRISHI SINCHAYEE YOJANA 



விவசாயத்திற்கு நீர் ஆதாரத்தை பெருகுவதற்க்கான திட்டமாகும் . வீணாகும் நீரை சேமிப்பதற்க்கு  மற்றும் மழை  நீர் சேகரிப்பு , பண்ணை குட்டை அமைப்பதற்க்கு அனா திட்டமாகும். ட்ரிப் மற்றும் ஸ்பிரிங்லர் பயன்படுத்துவதற்க்கு ஊக்கப்படுத்துகிறது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள விவசாயத்துறையை  அணுகவும் .

PRADHAN MANTRI FISAL BIMA YOJANA 



இத்திட்டம் பயிர் காப்பீட்டுக்கானது. குறைந்த கட்டணம் அதிக காப்பீடு என்ற அடிப்படையில் உருவானது ஆகும். விவசாய பயிர்களுக்கு மட்டுமின்றி தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்யலாம் . புயல், வெள்ளம் , வரட்சி  , இயற்கை தீ விபத்து மற்றும் அறுவடைக்கு பின் உள்ள இழப்பிற்கு சரிசெய்வதற்கான உள்ள திட்டமாகும்.

PARAMPARAGAT  KRISHI VIKAS YOJANA



இந்தியாவை பொறுத்தவரை உலகத்திலேயே இயற்கை விவசாயம் செய்யும் பழமையான நாடாகும். தற்சமயம் 22 லச்சம் ஹெக்ட்டருக்கு மேல் இயற்கை விவசாயம் நடக்கிறது . இத்திட்டத்தில் 3.50 லச்சம் விவசாயிகள் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள் மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள விவசாயத்துறை அலுவலகத்தை அணுகவும் .


MAHILA KISAN DIWAS 




பெண் விவசாயிகளுக்காக உருவாக்க பட்ட திட்டமாகும் . பெண்கள் விவசாயம் செய்வதற்க்கு , விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆரம்பிப்பதற்க்கு , மேலும் கால்நடை பண்ணை ,பால் பண்ணை , மீன் பண்ணை ஆரம்பிப்பதற்கு மற்றும் அது சார்ந்த கட்டிடங்களுக்கு உதவி செய்யப்படுகிறது 


RASHITRIA AAYOG KAMADHENU 



மாடு மற்றும் பால் வளத்திற்க்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பொருளாதாரத்தை மேற்படுத்தவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது  


Post a Comment

0 Comments