Skip to main content

2021 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான சிறந்த விவசாய மொபைல் ஆப்கள் பற்றி பார்ப்போம்

 Let’s see about the best agricultural mobile apps for farmers in 2021



நமது கிராமத்தில்  உள்ள மக்கள் டிஜிட்டலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருககிறார்கள் . பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய  ஒருஆய்வின் படி 2020 குள் 48 சதவீதம் கிராம மக்கள்  டிஜிட்டலை நோக்கி செல்வது அதிகரித்துள்ளனர் என்று சொல்கிறார்கள்  . அதே சமயம் 58 % மக்கள் விவசாயத்தையே  தங்கள் வாழ்வாதாரம்மாக  நம்பி உள்ளனர் . விவசாய ஆஃப்கள்  வந்த பின்பு விவசாயிகளுக்கு வழிகாட்ட சுலபமான ஒரு ஊடகமாக அது மாறியுள்ளது  . பயிர் அல்லது காய்கறி, வேளாண்மை, பயிர் சாகுபடி, விதைத்தல் அல்லது அறுவடை செய்வதற்கான சரியான விஞ்ஞான வழியை இது வழங்குகிறது. பூச்சி மற்றும் நோய்களுக்கான பிரச்சனைகளையும்  மருந்துகளையும்  மற்றும் சரி செய்வதற்கான சரியான வழிமுறைகளை இந்த விவசாய ஆப்கள் தருகின்றன . இந்த விவசாய ஆஃப்கள்  விவசாயிகளுக்கு சிறந்த நண்பனாக விவசாயத்துக்கு உதவி செய்கிறது . நீங்கள் எந்த ஒரு பணமும் செலவு செய்யாமல் சுலபமாக கூகிள் PLAY STORE ல்  டவுன்லோட் செய்யலாம் .

இந்தியாவின் சிறந்த விவசாய ஆஃப்களை பார்ப்போம் தற்பொழுது இந்த ஆஃப்கள் தமிழ் மொழியிலும் பார்க்க முடியும் .

Kisan Suvidha


கிராமங்களில் உள்ள விவசாயிகளின்  வளர்ச்சிக்காக உருவாக்க பட்ட ஆஃப் , 2016-ல்  பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்டது . இதில் அடுத்த ஐந்து நாட்களுக்கு உள்ள காலநிலை முன்னறிவிப்பை தெரிந்து கொள்ள முடியும் . சந்தை விலை நிலவரம் , உரங்கள் , விதைகள் மற்றும் மெஷின் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் . அணைத்து வித மொழிகளிலும் இதை பார்க்க முடியும் .

IFFCO Kisan Agriculture

இது 2015 -ல் தொடங்கப்பட்டது. விவசாயின் தேவை அறிந்து அதற்க்குரிய  பதில்களை அளிப்பதாகும் . இந்த ஆப் மூலம் பல தகவல்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். விவசாயம் , காலநிலை , விலை பட்டியல். மேலும் இந்த செயலி மூலம் விவசாயம் சம்பத்தப்பட்ட விவரங்களை  டெக்ஸ்ட் , ஆடியோ , மற்றும் வீடியோ மூலமாக சொந்த மொழியிலே தெரிந்து கொள்ளலாம் . முக்கியமாக இந்த செயலியில் போன் நம்பர் மூலமாக கூட உங்கள் சந்தேகங்களை கேட்கலாம் .




Pusa mKrishi




2016 ஆம் ஆண்டு விவசாயிகள் விவசாயத்தில் உள்ள தொழில் நுட்பங்களை தெரிந்துகொள்ள IARI யால் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய செயலியாகும். இந்த செயலி அதிக வருமானம் வருவதற்க்கு உதவும் . மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் ரகங்களை பற்றி தெரிந்துகொள்ளவும் , பண்ணைக்கு தேவையான இயந்திரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

 Agri App 

இந்த செயலியை விவசாயிகளுக்கு மட்டுமே உதவக்கூடிய சிறந்த செயலியாகும் . இந்த செயலியில் பயிர் பாதுகாப்பு , பயிர் உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த அணைத்து தொழில்களுக்கும் சரியான தகவல் கிடைக்கும் . மேலும் விவசாயம் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கலந்துரையாடலாம் , வீடியோ பதிவுகளும் மூலம் கற்றுக்கொள்ளலாம் . உரங்கள் பற்றிய விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்

RML Farmer- Krishi Mitr 



இது விவசாயிகளுக்கு சிறந்த முறையில் உதவக்கூடிய செயலியாகும். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சமீபத்திய பொருட்கள் விலை நிலவரம்  மற்றும் மண்டியில்  விலை நிலவரங்களை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும் . விவசாயம் மற்றும் விவசாயிகள் சார்ந்த செய்திகளை அறியலாம். விவசாயம் சார்ந்த அறிவுரைகள் மேலும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் .

Crop Insurance


ஒவ்வொரு விவசாயியும் வைத்திருக்கவேண்டிய முக்கியமான செயலியாகும் .  உங்களுடைய பயிர்காப்பீடு பற்றியும் , உங்களுடைய பிரீமியம் பற்றியும் எவ்வளவு தொகை கட்டவேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் . இது விவசாயிகளுக்கு அவர்களின் காப்பீட்டைப் பற்றியயும்  மற்றும் எவ்வளவு கட்டவேண்டுமென்றும் தெரிவிக்கும் . எந்தவொரு அறிவிக்கப்பட்ட பகுதியிலும் அறிவிக்கப்பட்ட பயிரின் சாதாரண காப்பீடு, நீட்டிக்கப்பட்ட தொகை காப்பீடு, பிரீமியம் விவரங்கள் மற்றும் மானியத் தகவல்களைப் பெறவும் இந்த செயலியை  பயன்படுத்தலாம்.

Kheti-Badi


இந்த செயலி இயற்கை விவசாயிகளுக்கென உருவாக்கப்பட்டதாகும் . இது இயற்கை விவசாயம் சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் செய்திகளை தெரிந்துகொள்ளலாம் . இந்த செயலி  செயற்கை விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்துக்கு மாற உதவி செய்கிறது . ஆனால் இந்த செயலி ஹிந்தி , ஆங்கிலம் ,மராத்தி மற்றும் குஜராத்தி மொழியில் மட்டும் உள்ளது 

Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...