Ad Code

Ticker

6/recent/ticker-posts

வேம் என்றால் என்ன - Vesicular - Arbuscular Mycorrhiza VAM

Vesicular - Arbuscular Mycorrhiza


வேம் என்ன வேலை செய்யும் - VAM what works



வேம் என்பது ஒரு பூஞ்சை ஆகும் இது பூமியில் உரக்க நிலையில் உள்ள மணிச்சத்தை உடைத்து வேர்களுக்கு கொடுப்பதால் வேர்கள் அதிகமாக பிரிந்து அதிகமாக வளர்ந்து பயிர்கள் பூமியிலிருந்து அதிக சத்துகளை எடுத்துக்கொள்ள உதவுகிறது. இதை கொடுத்தால் எந்த பயிரெல்லாம் பூமிக்குள் விளைகிறதோ உதாரணமாக கேரட் , நிலக்கடலை , உருளைக்கிழங்கு இந்த மாதிரி பூமிக்குள் விளைய கூடிய அனைத்துவித கிழங்கு வகைகள் மற்றும் தாவர வகைகளுக்கு உதவுகிறது . மணிச்சத்து மட்டும்மல்ல நுண்ணூட்ட சத்துக்களான துத்தநாக சத்து , தாமிர சத்து மற்றும் கால்சியம் சத்து இதையெல்லாம் பூமியில் இருந்து எடுத்து வேர்களுக்கு சுலபமான வழியில் கொடுக்கிறது  இந்த வேம்


வேம்மை எங்கே பார்க்கலாம்



இந்த வேம்மை எங்கே அதிகமாக பார்க்கலாம் என்றால் சோளம் அல்லது வெள்ளை சோளம் போட்ட வயல்களில் அந்த பயிர்கள் முடிந்த பின்பு அடுத்த பயிர்களில் விளைச்சல் நன்றாக இருக்கும் அதற்கு காரணம் சோளதின் வேர்களில் உள்ள இயற்கையில் உருவாக கூடிய இந்த பூஞ்சைகள் பூமியில் தங்கி அடுத்து பயிருக்கு வேண்டிய சத்துகளை இந்த வேம் பூஞ்சை கொடுக்கிறது இதுதான் அந்த வேமின் முக்கியமான வேலையாகும். இதை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தில் பயன்படுத்தலாம் இடத்தை சின்ன மற்றும் பெரிய வெங்காயத்தில் வேர்கள் உருவாக வேண்டிய நாட்களான 25 வைத்து நாளும் அந்த வேர் முறையை பெருசாக வேண்டிய நாட்களான 42 முதல் 46 வரை உள்ள நாட்களும் இதை பூமியில் கொடுக்கும் பொழுது வேர்கள் விரிவதுமட்டுமில்லாமல் சத்துகளை வேர்களில் தேக்கி அதிக அளவு பலன் தர வாய்ப்பிருக்கிறது. சின்ன வெங்காயத்தின் அடிப்படை குணமான காரம் அதை கொடுக்க கூடிய துத்தநாகம் , தாமிரச்சத்து மற்றும் கந்தகச்சத்து இதெல்லாம் பயிருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் 


அதிகமான விளைச்சல்



வேம் போட்ட வயல்களில் இருக்ககூடிய கேரட் , உருளை கிழங்கு , கடலை போன்ற பயிர்கள் வந்து அதிகமான விளைச்சல் , தரம் மற்றும் அந்த ரகத்திற்கேற்ற இயல்பு தன்மையும் இருக்க செய்வது வேமின் அடிப்படை குணம் . இது ஒருவகையில் 60 சதவீதம் சூடோமோனஸ் மாதிரி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது . அதற்கு மேல் உள்ள 40 சதவீதம் இந்த வேலையே செய்வது . அதே சமயம் இதுவும் சூடோமோனுசும் ஒன்றா என்றால் 60 % செய்லபாடுகளில் இரண்டும் ஒன்றே அதற்க்குமேல்  மேல் இந்த வேலையை செய்யும் . குறிப்பாக செம்மண் சரளை நிலங்களில் மற்றும் மானாவாரி நிலங்கள் குறிப்பாக சத்து குறைபாடு உள்ள நிலங்களில் லாபம் கொடுக்க வைக்கிற முக்கியமான பொருளாக  இந்த வேம் இருக்கும். 


பயன்படுத்தும் அளவு


இது பார்ப்பதற்க்கு மணல் மாதிரி ஒரு திட பொருளா இருக்கும். இதை எப்படி கொடுக்கலாமென்றால் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ மணலோடு கலந்து தூவலாம் , அல்லது தண்ணியில கலந்து தரைவழி பாத்தியில் ஊற்றி விடலாம். கடலை பயிர் எடுத்து கொண்டால் 25 , 40 மற்றும் 55வது நாள் இதை வேம்மை கொடுப்பது நல்லது . இதே மாதிரி வேம்மை மற்ற பயிர்களுக்கு 15 நாள் இடைவெளியில் கொடுப்பது நல்ல லாபம் கொடுக்கும் . இதை கொடுப்பதன் மூலம் பாஸ்பரஸ் சத்து சம்பந்தப்பட்ட இடுபொருட்களின் அளவை குறைக்கலாம் பணமும் மிச்சமாகும்  

Post a Comment

0 Comments