Ad Code

Ticker

6/recent/ticker-posts

மரமுருங்கை நடவு முறை

Tree drumstick planting method



நன்கு உழ வேண்டும்


மர முருங்கை என்பது நிலம் முழுவதும் ஆக்கிரமித்து வளரக்கூடியது குறைந்தபச்சம் 12 முதல் 15 ஆதி அகலத்தில் வளரக்கூடியது . நடும்பொழுது 20*20 அடி  இடைவெளியில் நடவேண்டும் நடுவதற்க்கு முன் நிலத்தை ஒருதடவைக்கு மூணுதடவை நன்கு உழ வேண்டும் இரண்டு தேவை ஐந்து கை  கலப்பையும் ஒருதடவை ஒம்பது கை  கலப்பையும்  போட்டு உழவேண்டும் மேல் மண்ணை நன்றாக பொலபொலப்பாக்கிவிட்டு நடலாம் இப்படி செய்வதால் வேர்கள் நன்றாக பரவி கிளைகள் நன்றாக வளர்ந்து காய்கள் நிறைய பிடிக்கும் .

ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு




உழுத பின்பு வெயில் அதிகமாக இருந்தால் இரண்டு நாள்கள் கம்மியாக இருந்தால் ஏழு நாட்கள் நிலத்தை ஆரவைத்துவிட்டு  பின்னர்  20*20 இடைவெளியில் 3*3 அடி குழி எடுத்து தோண்டிய மண்ணை முக்கால் குழி  உள்ளே இழுத்துவிட்டு மூணாவது அடி விளிம்புல  குழிக்குள்ள 5 கிலோ மக்கள் தொழு உரத்தை தூள் தூளாக்கி சுற்றி வர போட்டுவிட்டு அதாவது மரமுருங்கை செடியை நடுவில் வைத்துவிட்டு  குழியின் ஓரத்தில் சுற்றி போட வேண்டும் . தொழு உரத்துடன் பவுடராக இருந்தால் 20 கிராம் திரவமாக இருந்தால் 10 மில்லி சூடோமோனஸ் கலந்து போடவேண்டும் , மீதமுள்ள மண்ணை போட்டு நன்றாக அமுக்கி விட வேண்டும் . மீதமுள்ள மண்ணை 6 அடி  விட்டமுள்ள வட்டப்பாத்தியாக எடுக்கவேண்டும்  இப்பொழுது தண்ணீர் விடலாம் 

தொழு  உர புழுவை கட்டுப்படுத்த



சில விவசாயிகள் மக்கிய தொழு  உரத்தால் புழு வருகிறது மரமுருங்கையின் வேரை  தின்று விடுகிறது அதனால் நட்ட 6 மாதத்திற்க்கு எதுவும் இடவேண்டாம் என்கின்றனர் இது தவறாகும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல் செடிக்கு உரம் கட்டாயம் கொடுக்க வேண்டும். புழுவை கட்டுப்படுத்த தொழுஉரத்தை எட்டு  நாள் வைத்திருந்து ஒரு டிராக்டர் லோடிற்க்கு 1 கிலோ மெட்டாரைசியம் அனிசோபிளம் கலந்து வைத்தால் மக்கள் தொழு உரத்தில் இருக்கக்கூடிய புழுக்கள் மற்றும் அதன் முட்டைகள் அளிக்கப்பட்டுவிடும் . மக்கிய தொழு உரம் ஒரு முக்கிய இடுபொருள்

அல்லது 


அசோஸ் பயிரில்லம் வேளாண் அலுவலகத்தில் கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கும் அதை வாங்கி ஒரு மரத்திற்க்கு 30 கிராம் அசோஸ் பயிரில்லம்  20 கிராம் பாஸ்போ பாக்டீரியா 10 கிராம் சூடோமோனஸ் கலந்து குழியோட உள் பக்கத்தில் போட்டுவிட்டு இப்பொழுது மண்ணை மூடி வட்டப்பாத்தி போடலாம் அளவான தண்ணீர்  கொடுத்து மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் கொடுக்கலாம்  

வட்டப்பாத்தி போட்ட பின்னர் மரங்கள் வளர்ந்து புதுசா காய்கள் வருவதற்க்குள் ஏதவது ஊடுபயிர் போட்டால் கூடுதல் வருமானமும் கிடைக்கும் களையும்   கட்டுப்படுத்தலாம் 

Post a Comment

0 Comments