Ad Code

Ticker

6/recent/ticker-posts

நாம் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறிவது எப்படி சில சுலபமான வழிகள்

Here are some easy ways on how to detect impurities in our daily foods


நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் கலப்படம் இருப்பதாக வரும் செய்திகள் நம்மை அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நாம் உணவுப்பொருள் வாங்குபவர்களிடம் நம்பகத்தன்மையை குலைக்கச்செய்கிறது . நாம் வாங்கும் உணவு பொருட்களில் கண்டுபுடிக்க சிலவழிமுறைகள் உள்ளன , அவற்றை பற்றித்தெரிந்து கொள்ளலாம் .


பால் - Millk


நாம் அன்றாட பயன்படுத்தும் முக்கியமான உணவுப்பொருள் . ஒரு பளபளப்பான சாய்தளத்தில் ஒரு சொட்டுப்பாலை விடுங்கள் கலப்படம் இல்லாத பாலாக இருந்தால் வெண்மை தடம் பதித்து மெதுவாக  கிழே இறங்கும் .தண்ணீர் கலந்திருந்தால் வேகமாக வழுக்கி ஓடும் .

நெய் - Ghee


ஒரு கண்ணாடி கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது வெண்ணெயை விட்டு அதில் வேகவைத்து மசித்த உருளைகிழங்கை நன்றாக பிசைந்து அதில் அயோடினை இரண்டு சொட்டு விடவும் உருளை கிழங்கு நீல கலராக மாறினால் கலப்படம் உள்ளது .


காபித்தூள் - Coffee powder 


ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி ஒரு ஸ்பூன் காபித்தூளை போடுங்கள் அதில் காபித்தூள் சக்கரைத்தூள்  மாதிரி மிதந்தாள் சிக்கரி கலப்படம் உள்ளது

 
டீ தூள் - Tea


ஒரு வடிகட்டியை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் டீ தூளை பரப்பி வைக்கவும் பின்பு நீரில் கழுவவும் வடிகட்டியில் கரை ஒட்டியிருந்தால் கலப்படம் , தூய தூளில் கழுவும்போது கரை வராது .


காய்கறிகள் - Vegetables


ஒரு காய்கறி எடுத்துக்கொண்டு உதாரணமாக பச்சை மிளகாய் எடுத்துக்கொள்ளுங்கள் , துணி அல்லது பஞ்சு எடுத்துக்கொண்டு அதில் நீர் அல்லது சிறிதளவு என்னை எடுத்து மிளகாயில் தேய்க்கவும் , துணி பச்சையாக மாறினால் கலப்படம் .


மஞ்சள் - Turmeric


மஞ்சள் தூளில்  கலப்படம்  உள்ளதை தெரிந்துகொள்ள ஒரு  கண்ணாடி டம்ளரில் தண்ணீரை ஊற்றி அதில்  மஞ்சள் பொடியை  போடுங்கள் கலப்படமான மஞ்சள் தூளாக இருந்தால் அடர் மஞ்சள் நிறமாக தோன்றும். 

Post a Comment

0 Comments