Ad Code

Ticker

6/recent/ticker-posts

மிளகாய் சாகுபடி

Agriculture In India - Cultivation of chillies



 சிகப்பு தங்கம் என்று இதற்கு பெயர். இதை பயன்படுத்தாத மக்கள் மற்றும் நாடு கிடையாது. 


மேட்டுபாத்திகளில் நாற்றங்கால் விடவேண்டும். அதாவது 3×9 நீள அகலங்களில் மற்றும் அரை அடி உயரம் இருக்க வேண்டும். 


தொழுஉரம் வயலில் இட்டு நன்கு உழுது 2.5 அடி அகல பார்கள் அமைத்து 2.5 அடி இடைவெளியில் நடலாம்.முதலில் வயலில் தண்ணீர் பாய்சவேண்டும் பின்பு உயிர் உரங்கள் இட்டு 35 நாள் நாற்று  ஒரு குத்துக்கு மூன்று நாற்றுகள் நடவேண்டும்.


 அதாவது நாற்றங்காலில் ஆங்காங்கே ஓரிரு  பூ  தோன்றிய பின்பு நாற்றுகளை பிடுங்கி நடவுசெய்வது பின் காலத்தில் திடமான செடிகள் மற்றும் நல்ல மகசூலை எடுக்கலாம். 


நட்ட பத்தாவது நாள் முதல் களை. பின்பு தொடர்ந்து இயற்கை கரைசல்கள் தொடர்ந்து அளிப்பதன் மூலம் உயரமான செடிகள் அதிக ஆயுட்காலம் உண்டாகும். 


இவற்றை அதிகம் தாக்குவது இலை முடக்கு .அசுவினி மற்றும் காய்துளைப்பான்.ஆரம்பம் முதல் கற்பூரகரைசல் தொடர்ந்து தெளிப்பதனால் பூச்சிகள் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். 


 மண்புழு உரம் மற்றும் VAM  ,மீன் அமிலம் கலந்து இருபது நாட்கள் ஒருமுறை வேரில் கொடுத்து பின் மீன் அமிலம் செடிகள் மீது தெளித்தால் கவர்ச்சி யான காய்கள் மற்றும் செடிகளை பெறலாம். 


மிளகாய் பயிர் ல் கற்பூரகரைசல் தெளித்தால் அளவுக்கு அதிகமான பூக்கள் உருவாகும். அதேசமயம் பூக்கள் உதிராமல் இருக்க அதற்கு தேங்காய் பால் கடலை புண்ணாக்கு கரைசல் தொடர்ந்து தெளித்தால் பூ முற்றிலும் உதிராது. 


மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசல் வேரில் கொடுப்பதன் மூலம் அதிக வேர் வளர்ச்சி மற்றும் திடமான .உயரமான. அதிக கிளைகளை உடைய செடிகள் உருவாகும்.


இலைகள் மீது தெளிப்பதால் திரட்சியான மற்றும் நீளமான மிளகாய் கிடைக்கும். பயிரின் வாழ்நாள் நீடிக்கும். 


பச்சை மிளகாய் வாரம் ஒரு முறை பறிக்கலாம். காயந்த வற்றல் மிளகாய் ஆக இருந்தால் நன்கு பழுத்த பின் அறுவடை செய்து சிமெண்ட் தரை ல் காயவைத்து சேமிக்கலாம்.


மிளகாய் பயிரில் கண்டிப்பாக தண்ணீர் தேங்க கூடாது. மண் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் பாய்சவேண்டும்.இல்லை என்றால் வேர் அழுகல் ஏற்பட்டு செடி காய்ந்து விட வாய்ப்பு. 


 இதன் ஆயுட்காலம் சுமார் ஆறு மாதங்கள் .


ஒரு விவசாயி ன் பொருளாதார நிலையை திடீரென உயர்த்தும் பயிர்களில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கும். 


Post a Comment

0 Comments