Ad Code

Ticker

6/recent/ticker-posts

பந்தலில் இருக்கக்கூடிய கொடி வளரனும் அல்லது தரையில் இருக்கக்கூடிய கொடி வளர என்ன வேண்டும்

What should be the flag grower who may be in the pandal





நமக்கு தேவையான   முக்கியமான விஷயம் மீன் அமிலம் அதுதான் முதலில் வேண்டும் அடுத்து ஊட்டம் ஏற்றிய தொழு உரம் அல்லது கணம் ஏற்றிய ஜீவாமிர்தம் மூணாவது பஞ்சகாவியா நாலாவது இ . எம்  கரைசல் இதை எல்லாம் சீரான இடைவெளியில் கொடுக்கவேண்டும் .


மீன் அமிலம் ஒவ்வொரு தூருக்கும் குறைந்தபச்சம் 10 மில்லி கொடுக்க வேண்டும் . அதாவது 100 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மீன் அமிலம் கலந்து அதை எடுத்து ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றி விடவேண்டும் கண ஜீவாமிர்தமாக இருந்தால் ஒரு கிலோ அளவிற்கு வைக்கலாம் . அதேபோல்  ஊட்டமேற்றிய தொழு உரம் ஒரு கிலோ வைக்கலாம் வாய்ப்புக்கிடைத்தால் 2 கிலோ கூட வைக்கலாம் பஞ்சகாவியாவை தெளித்து பயன்படுத்திக்கொள்ளலாம் . இ எம் கரைசலை 100 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பந்தல் காய்கறி நன்றாக வளர்ந்திருந்தால் 2 லிட்டரும் கலக்கலாம் . அடுத்து ஜீவாமிர்தம் இருந்தால் ஒவ்வொரு தூருக்கும் ஒரு லிட்டர் ஊற்றவேண்டும் நல்ல பலன்களை கொடுக்கும் .  

 


இது எல்லாம் கொடுப்பதற்கு முன்னாடி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் அல்லது பேசில்ஸ் சப்ஸ்டிலஸ் அல்லது விரிடி 200 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் கலந்து தூருக்கு ஒரு லிட்டர்  ஊற்றி விடுவது நல்லது  இன்னும் 10 லிட்டருக்கு  50 மில்லி தெளிச்சுவிட்டு இத செய்வது நல்ல பலன்தரும் 


செம்மண் நிலமாக இருந்தால் கொடி வகை பயிர்களுக்கு சாம்பல் சத்து கண்டிப்பாக கொடுக்க வேண்டும் சாம்பல் என்றால் தூருக்கு 200 கிராம் கொடுக்கலாம் பொட்டாஷ் பாக்டீரியா என்றால் தண்ணீரில் கலந்து வேருக்கு ஒரு லிட்டர் ஊற்றிவிடலாம்  


Post a Comment

0 Comments