Ad Code

Ticker

6/recent/ticker-posts

Advantages of organic farm

இயற்கை வேளாண்மையில் உள்ள நன்மைகள் 


எந்த ஒரு தொழில் ஆரம்பிப்பதற்கு முன் அந்த தொழிலின் சாதகம் மற்றும் பாதகங்களை நன்கு ஆராய்ந்து விட்டு ஆரம்பிப்பது மிக நல்லது . அது இயற்கை வேளாண்மைக்கும் பொருந்தும் . இயற்கை விவசாயத்திற்கும் நன்மை தீமைகள் உண்டு , நன்மைகள் நிறைய உண்டு தீமைகள் ஒரு சில மட்டுமே உள்ளன சரியான திட்டமிட்டால் அதையும் நாம் கடந்து விடலாம் 


இயற்கை விவசாயத்தின் நன்மைகள் 


மண் பாதிப்பை தவிர்க்கலாம் 


செயற்கை விவசாயத்தில் முதலில் பாதிக்கப்படுவது மண் மற்றும் அதில் உள்ள நுண்ணுயிரிகள். ஆரம்பகட்டத்தில்  செயற்கை உரங்களை பயன்படுத்தும் போது விளைச்சல் அதிகம் இருக்கும் ஆனால் படிப்படியாக மண்வளம் குன்றி நுண்ணுயிரிகள் குறைந்து விளைச்சல் பெருமளவு குறைய ஆரம்பிக்கும் பூச்சி நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும் அதை கட்டுப்படுத்த பூச்சி கொல்லிகள் தெளிக்கும் போது  செலவு மேலும் அதிகரிக்கும் மண் பாதிக்கப்படும் உணவு பாதிக்கப்படும் அதை உண்ணும் நாமும் பாதிக்கப்படுவோம் .


அதுவே இயற்கை விவசாயம் என்று வரும்போது மேற்க்கூறிய அணைத்து பாதிப்புகளையும் நம்மால் தவிர்த்திட முடியும். ஓவுவொரு முறையும் அதிகபச்ச விளைச்சலை எடுக்கமுடியும்  ஆரோக்கியமான உணவு கிடைக்கும் . அடுத்து இயற்கை விவசாயத்தில் உற்பத்தி பொருள் அதிகமான நாள் வைத்திருக்க முடியும். ஒரு விவசாயிக்கு செலவு குறைந்து நல்ல மகசூல் இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும் . மண் வளம் பாதுகாக்க படும் 


சுற்று சூழல் மாசுபாடு 


ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகள் பயன்படுத்துவதால் உங்கள் நிலம் மட்டுமல்ல மற்ற இடங்கள் குறிப்பாக நீர் நிலைகளும் பாதிக்கப்படுகின்றன . மழை நீரில் அடித்து ரசாயனங்கள் செல்லப்படும்  ஆற்றில் கலப்பதற்கு வாய்ப்புள்ளது . நன்மை   செய்யும் பூச்சிகள் வருவது குறையும் இதனால் தீமை செய்யும் பூச்சிகள்  எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும்  தேனீக்களால் மகரந்த சேர்க்கையில் ஈடுபட முடியாது விளைச்சல் குறையும். ஆனால் இயற்கை விவசாயத்தில் இது மாதிரியான எந்த பிரச்சனையும் இருக்காது 



செலவு குறைவு 


ஒரு விவசாயிக்கு விவசாயத்தில் அதிக செலவு ஏற்படுத்தக்கூடியது உரங்கள் , பூச்சி கொல்லி மருந்துகள் , களையெடுப்பு . இயற்கை விவசாயத்தில் இதன் செலவை பெருமளவு குறைக்கலாம் . வீட்டில் மாடு வைத்திருந்தால் தொழு எரு வாங்கும் செலவை குறைக்கலாம் . மேலும் மீன் அமிலம் , பஞ்சகாவியா  , ஈ .எம் கரைசல்களை நம்மால் வீட்டிலேயே தயாரிக்க முடியும். மேலும் பூச்சி விரட்டிகளான அக்னி அஸ்திரம் , 3, 5 10 இலை கசாயம் ,இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் கரைசல், வேப்பெண்ணெய் கரைசல்  நம்மால் செய்ய முடியும் . இப்படி செய்வதால் உரச்செலவு மிக குறையும் நாம் பயன்படுத்தியது போக மிச்சத்தை நாம் வெளியில் விற்கவும் முடியும் அதில் நமக்கு லாபமும் கிடைக்கும்  இதை தவிர்த்து வெளியே விலை கொடுத்து சூடோமோனஸ் , பெவேரிய , லக்கானி போன்றவற்றை பவுடராக இருந்தால் 100 ரூபாய்க்கும் திரவமாக இருந்தால் 200 ரூபாய்க்கும் வாங்கலாம் . விவசாய அலுவலகத்தில் இதை விட குறைவாக கிடைக்கும் .


ஏற்றுமதி 


இயற்கை விவசாயம் செய்வதால் உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி NPOP பதிவு செய்து மற்றும்  TNOCD பதிவு செய்து சான்றிதழ் வாங்கி  வெளி நாட்டு சந்தைகளில் நாம் விற்கமுடியும். தற்பொழுது இயற்கை விவசாயத்தில்   விளையும் பொருட்களுக்கு  நல்ல விலை கிடைகின்றது 



 தீமைகள் 


இயற்கை விவசாயத்தை பொறுத்தவரை தீமைகள் என்று எதுவும் இல்லை . செயற்கை விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்திற்கு மாறும் பொழுது உடனடியாக அதிக விளைச்சல் கிடைக்காது படி படியாகத்தான் கிடைக்கும் . அதேபோல் இயற்கை விவசாயத்தில் ஆரம்பகட்ட செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் உதாரணமாக பழத்தோட்டத்தில்  பூச்சிகளை கட்டுப்படுத்த சோலார் விளக்கு பொறி ஏக்கருக்கு குறைந்தது 4 வைக்க வேண்டும் , தொழு எரு நீங்களே தயார்செய்கிறிர்கள் என்றால் மாடு கட்டாயம் வேண்டும் , அல்லது  உரம் தயாரிப்பு ,  இயற்கை உரம் தயாரிக்க , பூச்சி விரட்டி தயாரிக்க ,   ட்ரம் போன்ற பொருட்கள் வாங்க கொஞ்சம் செலவாகும் 


Post a Comment

0 Comments