Skip to main content

bio pesticides

இயற்கை விவசாயத்தில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்கள் 



bio pesticides

இயற்கை விவசாயத்தில் எவ்வளவுதான் முன் எச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து இருந்தாலும் நம்மால் யூகிக்க முடியாத ஓன்று பூச்சி , நோய் , மற்றும் அழுகல் . வேகமாக தாக்கியோ அல்லது பரவியோ நம் பயிர்களையும் ,உழைப்பையும், காசையும் வீண்ணடிக்கக்கூடியது . 


இதை தவிர்க்க என்ன செய்யலாம்

திட்டமிடல்

இயற்கை விவசாயத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஓன்று . என்ன பயிர் செய்யப்போகிறீர்கள் , அது எத்தனை நாள் பயிர் (நாட்களை பொறுத்து பயோ பெஸ்டிசைடு தேவையான அளவு இருப்பு வைக்கலாம் ). பூச்சி நோய் எதிர்ப்பு ரகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள் . அந்த பயிரில் எப்பொழுது பூச்சி , நோய் தாக்கும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் .  தேவையான பயோ பெஸ்டிசைடு எங்கே கிடைக்கும் அல்லது குறைந்தது 4 மாத expiry உள்ள   பயோ பெஸ்டிசைடு வாங்கி வைத்து கொள்ளலாம் . நாம் இந்த கட்டுரையில் என்னவிதமான பயோ பெஸ்டிசைடு உள்ளன என்பதை பார்ப்போம் .

பயோ பெஸ்டிசைடு இரண்டு வகையாக பிரிக்கலாம் 


1) நுண்ணுயிரிகள் கொண்டு தயாரிக்கப்படுவது அதாவது பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுவது 


2) பயோ கெமிக்கல் கொண்டு தயாரிக்கப்படுவது . இயற்கையாக தாவரங்களில் உருவாகும் பொருளை கொண்டு தயாரிக்கப்படுவது உதாரணமாக வேப்பெண்ணை கரைசல் இந்த வகை இயற்கை பூச்சி விரட்டிகளை நாமே தயாரித்து கொள்ள முடியும் 


நண்மைகள் 


1) செயற்கை விவசாயத்தை விட  பயோ பெஸ்டிசைடு பயன்படுத்துவதால் விளைவுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்கும்.


2) பயோ பெஸ்டிசைடு தெளிப்பதால் நாம் எதன் மீது தெளிகிறோமோ அதன் மீதுதான் அதன் தாக்கம் இருக்கும் பூச்சி கொல்லிமாதிரி நிலம் , பறைவைகள் , நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் விலங்குகள்  பாதிக்கப்படாது .


3) உயிர் பூச்சி கொல்லிகள் குறைந்த அளவில் அதிகம் பலன் தரக்கூடியவை மற்றும் வேகமாகவும் மக்கிவிடும் 



1) வெர்டிசிலியம் லக்கானி ( Verticillium lecani)


அணைத்து வகையான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம் , ( aphids, jassids, mealybugs, white flies, mites )

இது பூச்சிகளின் உடம்பிற்குள் நுழைந்து முடக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அழித்துவிடும் .


2) பெவேரியா பேசியானா (Beauveria bassiana)


காய்துளைப்பானை மற்றும் thrips போன்றவற்றை கட்டுப்படுத்தக்கூடியது . இது பூச்சிகளின் செரிமானப்பகுதியை தாக்கி 5 முதல் 7 நாட்களுக்குள் அழித்துவிடும் 


3) பெசிலியோமைசிஸ் (Paecilomyces lilacinus)

இது எல்லா வகையான நெமடோட்களை (nematodes) கட்டுப்படுத்தக்கூடியது . இது செரிமான பகுதியை தாக்கி முடக்க 5 டு 7 அழித்துவிடும் .


4) ட்ரைகோடெர்மா விரிடி மற்றும் ஹாசனியம் (Trichoderma viride and Harzianum)

இது உயிர் பூஞ்சான கொல்லியாகும் மண் சார்ந்த வேர் அழுகல் கட்டுப்படுத்த கூடியது 


5) சூடோமோனஸ் 

இதுவும் ஒரு பூஞ்சான கொல்லியாகும், அதுமட்டுமில்லாமல் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது 


6) பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ் 

பெரிய வகை புழுக்களை கட்டுப்படுத்தலாம் 


மேற்கூறிய அனைத்தும் இயற்கை விவசாயத்தில் நீங்கள் கட்டாயமாக வைத்திருக்க வேண்டுயவைகளாகும் 


Comments

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...