Skip to main content

காய்கறி பந்தல் சாகுபடி- தென்னை மட்டையில் ஒரு காய்கறி பந்தல் - 1

vegetable pandals cultivation



தமிழ்நாட்டில் இன்றைக்கு வளர்ந்து வரும் வேளாண்மை  செயல்பாடுகளில் இந்த பந்தல் காய்கறிகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானது . குறைந்த நாட்களில் அதிக வருமானம் தர கூடியது இந்த பந்தல் காய்கறிகள் , அது மட்டுமின்றி இந்த பந்தல் காய்கறிகளில் நிலையான விலை கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டில் நிறைய விவசாயிகள் பந்தல் காய்கறிகளை நோக்கி செல்கின்றனர் . அது மட்டுமின்றி தமிழநாடு அரசோடு தோட்டக்கலை துறையில பந்தல் அமைக்க கூடிய மானியங்களும் கிடைப்பதால் நிறைய விவசாயிகளும் பந்தல் அமைத்து வருகிறார்கள் இதில் பொதுவா பாகற்காய் , பீர்க்கங்காய் , புடலை , அவரை , கோவைக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது . ஓரளவு பண வசதி உடைய விவசாயிகள் அதாவது ஒரு ஏக்கருக்கு மூணு லச்சா ரூபாய் வரை செலவு செய்ய வாய்ப்புள்ள விவசாயிகள் , நிலையான கல் போட்டு  அதிலிருந்து கம்பிகள் கட்டி வரக்கூடிய பந்தல் விவசாய முறையை அவர்கள் செய்கிறார்கள் .



அடுத்து பெரிய அளவில் பணம் பந்தலுக்கு செலவு செய்ய முடியாத விவசாயிகள் குறைந்த செலவுல குறுகிய கால பயிர்களா , இருக்க கூடிய விஷயத்தை வைத்து பந்தல் அமைத்து செய்யலாம் என்று முடிவு செய்தால் எண்ணலாம் செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.



முதல் காரியம் அருகாமையில் உள்ள தென்னம் தோப்புகளில் இருந்து தென்னை மட்டைகள் அதை கொண்டு வந்து அதன் பக்கவாட்டு பகுதிகளில் உள்ள கிளைகளை வெட்டி எடுத்த பின்பு அதை காய விட்டு , காய்ந்த பின்பு அது எப்படி இருக்குமென்றால் ஒரு ஹாக்கி பேட் மாதிரி இருக்கும் . கீழே வளைந்தும் மேலே நேராகவும் இருக்கும். நாம்  கிழே வளைந்த பகுதியை தரையில் வைத்துவிட்டு , அதுபோன்று இரண்டு மட்டையை எதிர் எதிர் பிடித்தால் கிழே வளைந்து மேலே கோபுரம் மாதிரியான அமைப்பு வரும் அதை நாம் ஒரு பிளாஸ்டிக் கயிறு வைத்து கட்டலாம் . இது ஒரு கோபுர அமைப்பு என்று சொன்னால் இதேபோல் உங்களுடைய வயலில் மொத்த நீளத்திற்கு 5 அடி அல்லது 4 அடிக்கு ஓன்று வைக்கலாம் (இந்த அடி கணக்கு காற்று அடிப்பதை பொறுத்து உங்கள் பகுதியில் காற்று அதிகமாக அடித்தால் 4 அடிக்கு ஓன்று அல்லது கொஞ்சம் குறைவாக வீசினால் 5 அடி அல்லது 6 அடிக்கு ஒன்றுகூட வைக்கலாம் )



இந்த மாதிரியான கோபுரங்களை வரிசையாக வைத்த பின்பு.  இந்த கோபுரங்களின் தலை பகுதியில் கவையாட்டம் இருக்கும் , அதாவது இரண்டு விரலை விரித்து வைத்ததுபோல் இருக்கும் அதன் மேல் பகுதியில் ஒரு குறுக்கு குச்சியை வைத்து கட்டி விடலாம் இதனால் மேற்பகுதி ஆடாமல் இருக்கும் .


இப்பொழுது நாம் இந்த பந்தலோட பக்கவாட்டு பகுதியை ஒரு குச்சியை வைத்து தரையிலிருந்து ஒரு நாலடி உயரத்திற்கு கட்டி விடலாம் , ஒரு பிளாஸ்டிக் கம்பி போட்டோ அல்லது கட்டுக்கம்பி போட்டோ தொடர்ச்சியாக கட்டிவிட்டால் நின்றுவிடும் . அடுத்து இதை ஒரு 60 அடி  பண்ணுவீர்கள் என்றால் ஒண்ணாவது அடி  மற்றும் 60 வது அடியில் எதிர் எதிர் திசையில் ஒரு மூங்கில் அல்லது சவுக்கு அல்லது இதே தென்னமட்டை எதிர் திசையில் வைத்து ஆடாமல் இருப்பதற்காக ஒரு அமைப்பு செய்து அதனையும் இதனுடன் கட்டிவிடலாம் . இந்த மாதிரி அமைப்பு செய்வதால் குறைந்த பச்சம் தென்னை மட்டையின் தரத்தை பொறுத்து ஒருபோகம் அல்லது இருபோகத்திற்கு ஒரு பந்தல் கிடைக்கும் .


இந்த பந்தலில் அதாவது பந்தல் விவசாயம் எப்படி பண்ணுவோம் என்றால் 8 அடிக்கு ஓன்று அல்லது 6 அடிக்கு ஒன்றோ வட்ட குழி எடுத்து விதைகள் போட்டு அதை எழுப்பி கொண்டு வருவோம் . அப்படி ஒரு சூழ் நிலையில் பந்தலோட உள்பகுதியில் வட்டங்கள் எடுத்து அதில் நீங்கள் விதைகள் நட்டு மேலே எழுப்பி கொண்டு வரலாம் . இப்படி பந்தலுக்குள் வட்டம் போட்டு செய்வதால் நன்மைகள் என்ன என்றால் , குறைந்த தண்ணீரில் அதிக லாபம் கிடைக்கும் . இந்த மாதிரி செய்வதால் ஒரு மிக சிறந்த பந்தல் அமைப்பு நமக்கு கிடைக்கும்

இதில் செலவு என்று பார்த்தால் தென்னை மட்டை மற்றும் இந்த பந்தல் செய்வதற்கான ஆட்கள் செலவு மட்டுமே தென்னை மட்டை உறுதியாக இருந்தால் இரண்டு போகத்திற்கு கூட பயன்படுத்தலாம் . இதில் கரையான் அரிக்காமல் இருப்பதற்காக கரையான் எதிர்ப்பு மருந்து வாங்கி வைத்து கொள்ளலாம் 

Comments

Post a Comment

Smart vivasayi

Popular posts from this blog

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

ரெட் லேடி பப்பாளி

 red lady papaya plant குறைந்த விலையில் அதிக சுவை அதிக சத்து என்றால் அது பப்பாளிதான் . குறைந்த செலவு , குறைந்த காலம் , குறைந்த தண்ணீர் அதிக லாபம் கொடுப்பதாலேயே விவசாயிகளின் முதல் தேர்வு பப்பாளியாக உள்ளது. பப்பாளியோட இலை சாறு சிறந்த பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது . பப்பாளி மருத்துவகுணம் அதிகம் உள்ளது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உடலை மெருகேற்றவும் பயன்படுகிறது . பப்பாளி சாகுபடியில் இடைவெளி அதிகம் இருப்பதால் தாராளமாக ஊடு பயிரும் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பார்க்கலாம் . நாட்டு பப்பாளியில்தான் சுவையும் சத்தும் அதிகம் என்றாலும் வணிக ரிதியாக மற்றும் ஏற்றுமதிக்கும் ஒட்டுரக பப்பாளிகள்தான்  அதில் சிறந்த ரகம் ரெட் லேடி பப்பாளிதான் . நாம் இந்த கட்டுரையில் ரெட் லேடி பயிர் செய்வது குறித்து பார்க்கலாம் . பட்டம் மற்றும் நிலம் தயார்செய்தல்  ரெட் லேடி பப்பாளிக்கு ஆவணி மற்றும் கார்த்திகை மாதங்களில் நடவு செய்யலாம் . கரந்தை மண்ணில் பப்பாளி நன்றாக வளரும் . சட்டிக்கலப்பை மூலம் பத்து நாட்கள் இடைவெளியில் நன்கு காயவிட்டு இரண்டு முறை உழவேண்டும் . மறுபடியும் டில்லர் ம...