தென்னைநார்க் கழிவு உரம்... நீங்களே தயார் செய்யலாம் தென்னை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள், மண்ணில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க… தேங்காய் மட்டைகளைப் பதியம் போடுவது குறித்தும், இதில் சரியான வழிமுறையைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். தேங்காய் மட்டைகளை எப்படி சேமித்து பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம். ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ள பொன் வரிகளாகும். இந்த உலகத்தில் நன்மை என்று ஒன்றிருந்தால், அதற்கு எதிர்ப்பதமான தீமை என்ற ஒன்று இருப்பது நிச்சயம். எந்த ஒரு பொருளும் இரண்டு விதமான வினைகளை ஆற்றும். அதை நாம் அணுகுவதைப் பொறுத்துதான் நன்மையாகவும் தீமையாகவும் மாறும். தேங்காய் மட்டைகள் மற்றும் தென்னை மட்டைகள், விவசாயத்துக்கு நன்மை பயக்கக்கூடிய இயற்கை பொருள்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சரியாகக் கையாளவில்லை என்றால், சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு வழிவகுக்கும். இவற்றில் ‘டானின்’ என்ற வேதிப்பொருள் அதிக அளவு உ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்