Skip to main content

Posts

Showing posts from August, 2025

ஆழ்துளைக் கிணற்று நீரில் அதிக உப்புத்தன்மை... தீர்வு என்ன?

“குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளிலும் எப்போதும் ஒரே விதமான நிலத்தடி நீர் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது. பொதுவாக, ஆழ்துளைக் கிணறு அமைப்பைப் பொறுத்தவரை, பல்வேறு பாறை அடுக்குகளில் உள்ள உப்புப் படிமங்கள் நீருடன் கரைந்து வெளியேறும். அந்த அடுக்கில் உள்ள உப்புத்தன்மையைப் பொறுத்து, நிலத்தடி நீரில் உப்பின் அளவு மாறுபடும். இது நிலத்துக்கு நிலம் வேறுபட வாய்ப்புள்ளது. நீர்மூழ்கி மோட்டார் இயங்கும்போது, அதில் உள்ள விசிறி சுழன்று, எந்தக் கனிம அடுக்கை அரிக்கிறதோ அதில் உள்ள உப்பானது நீரில் கரைந்துவிடும். இதைப் பொறுத்தும், நிலத்தடி நீரின் உப்புத்தன்மையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். விளைநிலத்தில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தால், அதில் உள்ள உப்புத்தன்மை மழைநீர் மற்றும் பாசனநீரின் மூலமாக நிலத்தடி நீரில் கலப்பதற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள், உங்களுடைய ஆழ்துளைக் கிணற்று நீரின் உப்புத்தன்மை யைக் குறைக்க, பண்ணைக் குட்டை அமைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுமார் 15 அடி தூரத்தில் மேடான பகுதியில...

எறும்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது இதனால் பாதிப்புகள் ஏற்படுமா

“நிலக்கடலை செடிகளில் எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், அதை அலட்சியமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது. காரணம், அசுவினி பூச்சிகளின் தாக்குதல் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியே, எறும்புகளின் நடமாட்டம். இதனால், கணிசமான அளவு மகசூல் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  எனவே, எறும்புகளின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக செடிகளை உற்று நோக்க வேண்டும். குறிப்பாக, இலைகளின் அடிப்பாகத்தைப் பார்த்தால், அங்கு, அசுவினிப் பூச்சி குடிகொண்டிருக்கும். இது மிகவும் வேகமாக இனப்பெருக்கம் செய்யக்கூடிய பூச்சி இனமாகும். நிலக்கடலை செடிகளில் உள்ள இளம் தளிர்கள்,  முதிர்ந்த இலைகள், குருத்துகள் மற்றும் பூக்களிலும் அசுவினி பூச்சிகள் தங்கியிருந்து சாற்றை உறிஞ்சும். இதனால், செடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். இலைகள் சுருங்குவதோடு, மஞ்சள் நிறத்துக்கு மாறத் தொடங்கும். பூக்கள் உதிரும். கறுப்பு, சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும் அசுவினிப் பூச்சிகள், ஒரு வித திரவத்தைச் சுரக்கும். இனிப்புச் சுவை கொண்ட இத்திரவத்தை சுவைப்பதற் காகவே எறும்புகள் வரும். இத்திரவம் பட்ட பகுதிகளில் கறுப்பு நிறத்தில் பூ...