Skip to main content

Posts

Showing posts with the label Paddy

நெற்பயிரில் பாக்டீரியல் குலை நோய்

 paddy pest and diseases - Bacterial blight இந்த நோயோட தாக்கம் முதலில் எங்கிருந்து வரும் என்றால் நாம் நெல் விதையை விதைநேர்த்தி சரியாக  செய்யாமல் விதைத்தால் வரும் . அல்லது சரியாக பண்படாத அல்லது சரியாக முளைக்காத விதை நெல்லாக இருந்தால் அதிலிருந்து வரும் . இதை சரி செய்வதற்கு விதைப்பதற்கு முன்பு நெல் விதையை தரையில் பரப்பி சரியில்லாத விதைகள் பூஞ்சை பிடித்த விதைகள் போன்றவற்றை நீக்கி விடவேண்டும்  நெல் விதை நேர்த்தி ஒருகிலோ விதை நெல்லுக்கு பவுடராக இருந்தால் 10 கிராம் திரவமாக இருந்தால் 6 மில்லி சூடோமோனஸ் அல்லது விரிடி அல்லது பேசில்ஸ் சாப்ஸ்டில்ஸ மற்றும் 30 கிராம் அசோஸ் பயிரிலும் உடன் கலந்துசெய்யலாம்  நெல் பற்றிய மற்ற கட்டுரைகள் - Click Here   முதலில் விதை நெல்லை தண்ணீரில் கலந்து அழுக்கை நீக்கிவிடவேண்டும். அடுத்து சூடோமோனஸ் மற்றும் அசோஸ் பயிரிலும் கலந்து நன்றாக பிரட்டிவிடவேண்டும் . பிரட்டி விடுவதை  கடினமாக செய்க்கூடாது விதை முனை மழுங்கி விடும் ஒரு அகலமான கரண்டியில் செய்யலாம்  நிலம்  ஏற்கனவே பாக்டீரியல் குலை நோய்  வந்த நிலமாக இருந்தாலோ அல்லது நீங்...

நெல் சாகுபடி - நெல்லில் கருக்கா நோய்

  Paddy Cultivation -  Disease in Paddy நெல்லில் கருக்கா ஒரு தீமை செய்யும் பாக்டீரியாவால் வருகிறது இந்த பிரச்சனை எங்கிருந்து வருகிறது என்றால் தவறான விதை நெல் அல்லது விதைநேர்த்தி பண்ணாமல் இருப்பது , ஆரம்பகால நோய் எதிர்ப்பு விஷயங்கள் செய்யாமல் இருந்தது போன்றவைகளோட விளைவாக இது இருக்கலாம்  இது மேலும் பரவாமல் இருக்க பேசிலஸ் சப்டிட்லஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து நன்றாக நனைச்சு விட்டு தெளிக்கலாம் ஒருதடவை கொடுத்தீங்கனா மறுபடியும் 6வைத்து நாள் ஒருத்தடவ  கொடுக்கணும்

நெல் நாற்றங்கால் பராமரிப்பு - நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு Paddy Nursery Care

Paddy Nursery Care - To Grow Seedlings நெல் நாற்றங்காலில் முறையான நாற்றுகளில் வளர்ச்சியைப் பெறுவதற்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தரைவழி 300 மில்லி மீன் அமிலம் அடுத்த முறை 500 மில்லி ஈ. எம் கரைசல் அடுத்தமுறை 500 மில்லி பஞ்சகாவியா அடுத்த முறை 300 மில்லி மீன் அமிலம் என தரைவழி தரவும் மேலும் 10 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 75 மில்லி மீன் அமிலம் அல்லது 300 மில்லி பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசல் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம்.

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெல் குலை நோய் - Diseases affecting paddy - Paddy blight

Diseases affecting paddy - Paddy blight நெற்பயிரில் குலை நோய் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே வெள்ளைப் பொன்னி  பயிரிட்டுள்ள விவசாயிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பம் முதல் கொண்டு கடைபிடிக்கவும். 10 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் என்ற திரவத்தை கலந்து மாலை வேளையில் நன்கு நனையுமாறு தெளிக்கலாம் . பின்பு நடவு வயலில் நட்ட பின்பு 12 நாட்களுக்கு ஒருமுறை என 3 முறை தெளிப்பது நல்லது தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் கலந்து கொடுக்கவும்.

நெற்பயிரை தாக்கும் நோய்கள் - நெற்பழ நோய்

Diseases affecting rice crop - Rice disease அனைத்து வகை வெப்ப மண்டலப் பகுதிகளிலும் வெப்பம் குறைந்து ஈரம் அதிகமாகும் தருணங்களில், நெற்பயிரில் பூக்கும் நேரத்தில், பூக்களில் ஏற்படும் பூஞ்சை தொற்று நெற்பழ எனும் நோயாகும். இளம் ஆரஞ்சு நிறத்தில் உள்ள பஞ்சுபோன்ற அமைப்புடன் நாட்கள் ஆக ஆக மஞ்சள் நிறமாக மாறும் தன்மையுள்ள இந்த நோய் 35% வரை நமக்கு விளைச்சலை கெடுக்கக்கக்கூடிய வகையில் உள்ளது. இதனை சரிசெய்ய 1. வயலை சுத்தமாக களைச்செடிகள் இன்றி வைத்திருக்கலாம். 2.அதிகத் தண்ணீர் இல்லாமல் காய்ச்சலும் பாய்ச்சலுமாக நிலத்தை வைத்திருக்கலாம். 3.அதிக தழைச்சத்து கொடுக்கக்கூடிய இடுபொருட்களை தரைவழி தராமல் இருக்கலாம். 4.இந்தப் பூஞ்சைத் தொற்றை சரி செய்ய அரை கிலோ துளசி இலையை 10 லிட்டர் தண்ணீரில் நன்கு அரைத்த பின்பு இட்டு 12 மணி நேரம் ஊற வைத்த பின்பு வடிகட்டி, மாலை வேளையில் தெளிக்கலாம். அதனை ஐந்தாவது நாள் திரும்பவும் தெளிப்பது நல்லது. 5. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் பத்து லிட்டருக்கு 50 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது சூடோமோனஸ் கலந்து மாலை வேளையில் தெளிக்கலாம் ஆறாவது நாள் திரும்பவும் தெளிக்கலாம்.