மானாவாரி நிலத்தில் கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்து வருகிறேன். கதிர்கள் முற்றி தானியங்கள் அறுவடைக்கு வரும் தருணத்தில் படைக்குருவிகளின் தாக்குதலால், அதிக மகசூல் இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்கு என்னதான் தீர்வு? ” “மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி செய்வதென்பது சவாலானது. சீரான மழைப்பொழிவு இல்லையென்றால், முதலுக்கே மோசம் வந்துவிடும். விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் விதமாக, நல்ல மழை பெய்து தானியங்கள் விளைந்து அறுவடைக்கு வரும் நேரத்தில் படைக்குருவிகள், கிளிகள் உள்ளிட்ட பறவைகளின் தாக்குதலால் மகசூல் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. கதிர் பிடிக்கத் தொடங்கியதும், 10 சென்ட் பரப்புக்கு 1 இடம் வீதம், சுமார் 15 அடி நீளம் கொண்ட ஆடியோ டேப்பில் 16 சி.டி-க்களை தொங்கவிட வேண்டும். பயிரின் உச்சிக் கிளைகளுக்கு இடையே, வெளிப்புறமாக கட்ட வேண்டும். ஊன்றுகோள்களாக குச்சிகள் பயன்படுத்தினால், அவற்றில் பறவைகள் வந்து அமர்ந்து சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, குச்சிகள் ஊன்றுவதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி போன்ற சி.டி-க்களில் ஏற்படும் பிரதிபலிப்பால் மட்டுமல்லாமல், ஆ...
விவசாயம் தோட்டக்கலை மற்றும் கால்நடை சார்ந்த பதிவுகள்