Skip to main content

Posts

ஆடு வளர்ப்பு - ஆடுகளை சந்தையில் வாங்கப்போறீங்களா இதையெல்லாம் கட்டாயம் கவனிங்க

Goat rearing  -    If you are going to buy goats in the market, you must pay attention to all these       விவசாய உப தொழில்களில் முக்கியமானது ஆடு வளர்ப்பு. நீங்களும் , ஆடு வாங்கி வளர்க்கலாம்னு ஆசை இருந்தா சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் . நீங்கள் சந்தையில் ஆடுவாங்க முடிவு செய்துவிட்டால் வாங்க வேண்டிய அட்டை சற்று தூரத்தில் நின்று கவனிக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆடுகள் நன்றாக நடக்கிறதா அல்லது காலில் ஏதாவது அடிபட்டு இருகிறதா என்று தெரியும் . ஆடுகள் மேயும் போது முற்களோ அல்லது குச்சியோ குத்தி கண்பார்வை குறைவாக உள்ள வாய்ப்புள்ளது இதனை கண்டறிய உங்கள் ஆல்காட்டி விரலை ஆட்டின் கண்களை குத்துவதுபோல் செல்லுங்கள் ஆடு கண்களை திருப்பிக்கொண்டாள் கண்கள் நல்ல நிலையில் உள்ளன . ஆடுகளின் உதட்டில் கொப்புளங்கள் இருந்தால் அது ஆட்டம்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் , மருவா கொப்பளமா என்று சரியாக பார்த்து வாங்கவேண்டும் .ஆடுகள் முடியை தடவி பார்க்கும்பொழுது சொறி சிரங்கு போன்றவை இல்லாமல் இருக்கவேண்டும் . ஆடு வாங்கும் போது அதன் கழிவு எப்படி இருகின்றது...

தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை சுருள் பூச்சி- உயிரியல் கட்டுப்பாடு

coconut cultivation - rugose pest  management   தென்னை விவசாயிகள் கடந்த சில வருடங்களாக அதிகம் உச்சரிக்கும் வார்த்தை ரூகோஸ் என்ற வெள்ளை சுருள் பூச்சி. இதன் தாக்கம் தென்னையில் பெருமளவு மகசூலை குறைத்திருக்குகிறது அதே சமயம் தென்னை மட்டுமின்றி  வாழை மற்றும் சப்போட்டா போன்ற பழப்பயிர்களையும் தாக்குகிறது . இந்த வெள்ளை சுருள் பூச்சி தென்னை ஓலைகளில் பரவி வேகமாக இனப்பெருக்கம் செய்து தென்னை மரம் முழுவதும் பரவி ஓலையில் உள்ள சாற்றினை உறுஞ்சி ஒரு மெழுகு ஒரு தேன் திரவத்தை வெளியிடுகின்றன இது மட்டை முழுவதும் பரவி அதன் மேல் கேப்னோடியம் என்னும் கரும்பூஞ்சாணம் படா்கிறது. இதனால் ஒளிசேர்க்கை நடைபெறாமல் மரத்தின் சத்துக்கள் குறைவதுடன் தேங்காயின் அளவு மற்றும் தரம் குறைந்து மகசூலும் குறைகிறது அதே சமயம் பெரும்பாலும் இந்த பூச்சி குட்டை மற்றும் நெட்டை வீரிய ஒட்டு ரகங்களை அதிகம் தாக்குகிறது. கிரைசோபெர்லா இரை விழுங்கி   இந்த சமயத்தில் இந்த உயிரியல் முறை கட்டுப்பாடு மட்டுமே சிறந்த பலன்களை தருகிறது  இதன் தாள்களை ஸ்டாப்லர் பின் வைத்து தென்னை ஓலையில் பின் செய்துவிட்டால் மூன்றே நாட்க...

இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடு - கவனிக்க வேண்டியவை

organic farming முதலில் இயற்கையாக நாம் செய்கிற விவசாயத்தை இரண்டு வகை உண்டு  1. அங்கக விவசாயம் (Organic farming ) 2. இயற்கை விவசாயம் (Natural Farrming )  இது இரண்டிற்கும் என்ன வித்யாசம் என்று கொஞ்சம் புரியும்படி சொல்லவேண்டுமென்றால் உங்கள் பயிர்களை பூச்சி அல்லது நோய் தாக்கினால் அதற்கு நீங்கள் வேப்பங்கோட்டை கரைசல் தெளித்தால் அது இயற்கை விவசாயம் அதுவே வெர்டிசீலியம் லக்கானி தெளித்தால் அது அங்கக விவசாயம் அவ்ளவுதாங்க வித்யாசம் ஆனால் இந்த இரண்டு முறையிலும் பொதுவான ஒரு விஷயம் உண்டு அது உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல்  அதை பற்றை இந்த கட்டுரையில் பார்ப்போம்   உழவியல் முறை அல்லது மெக்கானிக்கல் கண்ட்ரோல் என்பதை எப்படி விளக்கமாக சொல்லலாம் என்றால் அந்த முறை பூச்சிகளை கவர்ந்து இழுத்து அளிப்பதாகும் . பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சின்ன சின்ன விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொண்டாலே நாம் இயற்கை விவசாயத்தில் பூச்சிகளை கட்டுப்படுத்தி விடலாம் . கோடை உழவு  விவசாயமாக இருந்தாலும் அல்லது இயற்கை விவசாயமாக இருந்தாலும் கோடை உழவு என்பது முதல் வேலை முக...

பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை எப்பொழுது கிடைக்கும்

pm kisan samman nidhi status பிஎம் கிசான் திட்டத்தின் 8வது தவணை ஹோலி பண்டிகைக்கு முன்னாள் கிடைக்கலாம்  பிரதமரின்  கிசான் சம்மான் நிதி யோஜனா என்பதை சுருக்கமாக பிஎம் கிசான் என்று அழைப்போம் , இதை விவசாயிகளுக்கு பண உதவிக்காக தொடங்கப்பட்ட திட்டமாகும் . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் வருடத்திற்கும் 6000 ரூபாயும் 2000 ரூபாயாக 3 தவணைகளில் விவசாயிகள் உரம் விதைகள் மற்றும் இதர விவசாய செயல்படுகளுக்காக கொடுக்கப்படுகிறது . இந்த திட்டமானது கொரோன காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையிலும் 2022 ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கும் உருவானதுமாகும் . இது வரை 7 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது , கடேசி தவணை சென்ற ஆண்டு டிசம்பரில் கொடுக்கப்பட்டது . அடுத்த பிஎம் கிசான் நிதி ஹோலி பண்டிகைக்கு முன்னர் கொடுக்க வாய்ப்புள்ளது ( தமிழ் நாட்டில் ELECTION நடப்பதால் ஓட்டளிப்புக்கு பின்னர் கிடைக்கலாம் ) எனவே தமிழ் நாட்டில் பதிவு செய்த விவசாயிகள் உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள் பிஎம் கிசான் நிதி எப்படி செக் செய்யலாம்  இந்த லிங்கை கிளிக் செய...

மாட்டு சந்தை - மாடு விற்பனை மார்ச் பார்ட் - 3

குறிப்பு : பொருட்களை நேரில் சென்று பார்த்து வாங்கி வரவும் ..தயவு செய்யுது ஆன்லைன் ல பணம் அனுப்பி வாங்குவதை தவிர்க்கவும் ..அவ்வாறு அணுப்பி வாங்கும் நபர்கள் பணம் இழந்தால் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது    வாங்கும் முன் தரத்தை சரிபார்க்கவும். நீங்கள் பணத்தை இழந்தால், அது எங்களது பொறுப்பு அல்ல. 15/03/2021 Updated 1) புதுவரவு: விற்பனைக்கு 15 - மாதங்களே ஆன அழகிய பெருங்கூட்டு மயிலைக்காளை கன்று ,நல்ல குணம், சுழி சுத்தம், விலை - ரூ.36,000/-, இடம் - காளிக்காவலசு, சென்னிமலை. தொடர்புக்கு : 9842551881; 9442551881. 2) *அழகிய மூன்றாம் ஈத்து மயிலை மாடு,அழகிய 67 நாட்கள் ஆன மயிலை காளை கன்றுடன். *பால் நாள் ஒன்றுக்கு 3lit கால் அனைத்து கரக்கவேண்டும் *பெண்கள் பால் கரக்கலாம்,நல்ல குணம் *மயிலை காளை சேர்க்கப்பட்டு 5நாட்கள் ஆகியது *விலை 54000 (தொடர்புக்கு 9944306802) (இடம் =திருச்செங்கோடு) 3) விற்ப்பனைக்கி விலை 40000+40000. 7மாத சினை தொடர்பு எண் 8524871043 4) உழைப்பாளி மாடுகள் எங்கள் நோக்கம் இந்த இனம் பெறுக வேண்டும். செம்மரை' என்றழைக்கப்படும் பர்கூர் இன மலைமாடுகளின் காளை கன்று ஜோடி விற்பனைக்கு !...

காய்கறி பந்தல் சாகுபடி- தென்னை மட்டையில் ஒரு காய்கறி பந்தல் - 1

vegetable pandals cultivation தமிழ்நாட்டில் இன்றைக்கு வளர்ந்து வரும் வேளாண்மை  செயல்பாடுகளில் இந்த பந்தல் காய்கறிகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானது . குறைந்த நாட்களில் அதிக வருமானம் தர கூடியது இந்த பந்தல் காய்கறிகள் , அது மட்டுமின்றி இந்த பந்தல் காய்கறிகளில் நிலையான விலை கிடைக்கும் என்பதால் தமிழ்நாட்டில் நிறைய விவசாயிகள் பந்தல் காய்கறிகளை நோக்கி செல்கின்றனர் . அது மட்டுமின்றி தமிழநாடு அரசோடு தோட்டக்கலை துறையில பந்தல் அமைக்க கூடிய மானியங்களும் கிடைப்பதால் நிறைய விவசாயிகளும் பந்தல் அமைத்து வருகிறார்கள் இதில் பொதுவா பாகற்காய் , பீர்க்கங்காய் , புடலை , அவரை , கோவைக்காய் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது . ஓரளவு பண வசதி உடைய விவசாயிகள் அதாவது ஒரு ஏக்கருக்கு மூணு லச்சா ரூபாய் வரை செலவு செய்ய வாய்ப்புள்ள விவசாயிகள் , நிலையான கல் போட்டு  அதிலிருந்து கம்பிகள் கட்டி வரக்கூடிய பந்தல் விவசாய முறையை அவர்கள் செய்கிறார்கள் . அடுத்து பெரிய அளவில் பணம் பந்தலுக்கு செலவு செய்ய முடியாத விவசாயிகள் குறைந்த செலவுல குறுகிய கால பயிர்களா , இருக்க கூடிய விஷயத்தை வைத்து பந்தல் அமைத்த...

கோடையில் மலர்கள் பராமரிப்பும் பாதுகாப்பும் செய்ய வேண்டியவை என்ன

What to do for the care and protection of flowers in the summer மல்லிகை பூ  (Jasmine) மல்லிகை செடி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்க துவங்கும் . செடிகளை முதலாண்டில் நட்டு பூக்கள் மகசூல் எடுத்திருந்தாலும் இரண்டாவது ஆண்டிலிருந்துதான் ஒரு அளவான மகசூல் இருக்கும் நல்ல வளர்ச்சியான மொட்டுக்களை அதிகாலையில்தான் பறிக்கவேண்டும் . இந்த நேரத்தில் மொட்டில் அல்லது இளம் மொட்டில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கும் இதனை கட்டுப்படுத்த 10 லிட்டருக்கு 50 மில்லி பெவேரியா பேசியான தெளிக்கலாம் . கனகாம்பரம் பூ (Kanakambaram flower) பெதுவாக இந்த காலகட்டத்தில் கனகாம்பரத்தில் அசுவினி பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஒன்றுடன் ஓன்று ஒட்டி ஒரு அடைபோல் ஒட்டி சாற்றினை உறுஞ்சி எடுத்துவிடும்  இதை கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம் .  அடுத்து வாடல் நோய் கனகாம்பர பூச்செடியில் தென்பட்டால் சூடோமோனஸ் 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து கொடுக்கவேண்டும் .  முல்லை பூ  இந்த காலகட்டத்தில் இலை தின்னும் புழுக்களின் தாக்கம் இருக்கும் அதனை கட்...

எலுமிச்சையில் துரு நோய்

Rust disease in lemons துரு நோய் என்பது பூஞ்சைகளை பொதுவா நாம் கவனிக்காமல் விடும்பொழுது அதோட அடுத்த கட்டம் இந்த துரு நோய் எலுமிச்சையாக இருந்தாலும் மற்ற பயிர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியது . பூஞ்சைலிருந்து சின்ன சின்ன துகள்கள் (spores ) அடுத்து அடுத்து பரவும் பொழுது பெரிய அளவு அடுத்த பாதிப்பை ஏற்படுத்தும் . 1) இதை கட்டுப்படுத்த மாதம் ஒரு முறை சூடோமோனஸ் தெளிக்கவேண்டும்  2) சூடோமோனஸ் தரைவழி 10 மில்லி தண்ணீரில் கலந்து கொடுக்கவேண்டும் . இது இரண்டையும் செய்தாலே பிரச்சனைகள் அதிகம் வராது . 3) இலைகள்  மிக நெருக்கமாக இருந்தால் அதாவது சூரிய ஒளி போக முடியாத அளவிற்கு இலைகள் நிறைய இருந்தால் உள்ளே உள்ள தட்ப வெப்ப நிலை குறைந்து இந்த மாதிரியான  துரு நோய் வர வாய்ப்புள்ளது . 4) தேவை இல்லாத இலைகள் மற்றும் கிளைகளை எடுத்துவிடலாம்  5) எலுமிச்சை வீட்டில் வளர்த்தாலும் அடிப்படையில் அது ஒரு காட்டு செடி அது எப்படி இருக்கவேண்டுமென்றால் கொஞ்சம் இலைகள் கிளைகள் கம்மியாக , கம்மியாக என்பதை விட ரொம்ப கொழு கொழுன்னு இருக்க கூடாது    எலுமிச்சை செட...

ஆடு வளர்ப்பில் வெற்றி பெற என்ன செய்யலாம்

                            goat rearing கோழி வளர்ப்பு அல்லது மாடு வளர்ப்பு இது இரண்டையும் விட குறுகிய காலத்தில் (ஓன்றை முதல் இரண்டு)  அதிக லாபம் தரக்கூடியது இந்த ஆடு வளர்ப்பு . வறட்சியான பகுதிகளில் கூட நம்மால் ஆடுகளை வளர்க்க முடியும் இதனால்தான் ஆடுகளை நம்மால் குறைந்த வருமானத்தில் வளர்த்து அதிக லாபம் அடைய முடியும் இந்த கட்டுரையில் ஆடு வளர்ப்பில் கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்  இடத்தேர்வு இந்த இடைத்தேர்வை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள் கோழி அல்லது மாடு வளர்ப்புபோல் ஒரு பெரிய அளவு இடம் இருக்காது என்றாலும் , ஆடு இருக்கும் இடம் கொஞ்சம் வார்ம் ஆக இருந்தால் நல்லது . ஆடு எப்பவுமே ஒரு கூட்டமாக வாழும் இயல்புடையது எனவே ஆட்டு பண்ணை ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் குறைந்தது 3 முதல் 5 ஆடு வரை வாங்கி வளர்க்கலாம் .  உணவு மற்றும் மேய்ச்சலுக்காக இடம்  ஆடு வளர்ப்பிற்கு அதிகம் இடம் தேவை இல்லை என்றாலும் , அதன்  மேய்ச்சலுக்கான இடம் கொஞ்சம் அதிகம் தேவை படும் . புற்கள் மற்றும் களைகள் நிறைந்த ப...

bio pesticides

இயற்கை விவசாயத்தில் நீங்கள் வைத்திருக்க வேண்டிய உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் அவற்றின் பயன்கள்  bio pesticides இயற்கை விவசாயத்தில் எவ்வளவுதான் முன் எச்சரிக்கை நடவெடிக்கை எடுத்து இருந்தாலும் நம்மால் யூகிக்க முடியாத ஓன்று பூச்சி , நோய் , மற்றும் அழுகல் . வேகமாக தாக்கியோ அல்லது பரவியோ நம் பயிர்களையும் ,உழைப்பையும், காசையும் வீண்ணடிக்கக்கூடியது .  இதை தவிர்க்க என்ன செய்யலாம் திட்டமிடல் இயற்கை விவசாயத்தில் திட்டமிடல் என்பது மிக முக்கியமான ஓன்று . என்ன பயிர் செய்யப்போகிறீர்கள் , அது எத்தனை நாள் பயிர் (நாட்களை பொறுத்து பயோ பெஸ்டிசைடு தேவையான அளவு இருப்பு வைக்கலாம் ). பூச்சி நோய் எதிர்ப்பு ரகங்கள் இருக்கிறதா என்று பாருங்கள் . அந்த பயிரில் எப்பொழுது பூச்சி , நோய் தாக்கும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் .  தேவையான பயோ பெஸ்டிசைடு எங்கே கிடைக்கும் அல்லது குறைந்தது 4 மாத expiry உள்ள   பயோ பெஸ்டிசைடு வாங்கி வைத்து கொள்ளலாம் . நாம் இந்த கட்டுரையில் என்னவிதமான பயோ பெஸ்டிசைடு உள்ளன என்பதை பார்ப்போம் . பயோ பெஸ்டிசைடு இரண்டு வகையாக பிரிக்கலாம்  1) நுண்ண...

agriculture startup ideas

  அக்ரிகல்ச்சர் ஸ்டார்ட்-அப்  ஸ்டார்ட்- அப் அப்படினா என்ன ? உங்களுக்கு   புரிய வேண்டுமென்றால் , நாம்  முதல் வகுப்பில் தமிழ் படிக்கும்பொழுது எடுத்தவுடன்  ஃ  படித்திருக்கமாட்டோம் அ தான் படித்திருப்போம் அதே போல்தான் இந்த ஸ்டார்ட்-அப் . இங்கே அ என்பது ஸ்டார்ட்-அப்   ஃ என்பது கார்ப்பரேட் . நீங்களோ அல்லது உங்களுடன் இரண்டு பேர் சேர்ந்தோ உங்களுடைய விவசாய பொருட்களை மார்கெட்டிற்கு கொண்டுவருவது ஸ்டார்ட் -அப் ஆகும் . இதை தொடங்குவதற்கு ஆரம்பிப்பதற்கு நீங்களே பணம் போடலாம் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். MSME உங்கள் ஸ்டார்ட் -அப் பதிவுசெய்தால் வங்கியில் இன்னும் சுலபமாக கடன் பெறலாம்  உங்களுடைய அக்ரி ஸ்டார்ட் -அப் மூணுவிதமா பிரிக்கலாம் 1) உற்பத்தித்திறன் தொடர்பான வேளாண் வணிகம் (Agribusiness related to productivity) இந்த ஸ்டார்ட் -அப் என்பது நீங்களே விவசாய பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்வது . உதாரணமா காய்கறிகளை உற்பத்தி செய்து ஒரு கடை வைத்து விற்பனை செய்வது  1) விவசாய பண்ணை  2) தோட்டக்கலை  3) பூக்கள்  4) இயற்கை விவசாய பண...